பார்சிலோனா அணிக்கு அபார வெற்றி

238
Barcelona vs Sporting
@gettyimages

ஸ்பெய்னில் நடந்துவரும் லா லிகா கால்பந்து லீக் போட்டியில், பார்சிலோனா அணி 6–-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் கிஜோன் அணியை வீழ்த்தியது.

கேம்ப் நோ மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 13ஆவது நிமிடத்தில் கோல் அடித்து கணக்கைத் தொடங்கி வைத்தார்.

முதல் பாதி ஆட்ட முடிவில் பார்சிலோனா 1–-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் அந்த அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. அபாரமாக விளையாடிய லூயிஸ் சுவாரெஸ் 4 கோல்களை அடித்து அசத்தினார் (63’, 74’, 77’, 88ஆவது நிமிடங்களில்) இதில் 3 கோல்கள் பெனால்டி கிக் வாய்ப்பில் அடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் பின் போட்டி முடிய சற்று நேரம் இருக்கும் போது நெய்மார் 85ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியாக முழு நேர முடிவில் பார்சிலோனா அணி 6–-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. பார்சிலோனா அணி சார்பாக சுவாரெஸ் 4 கோல்களைப் போட மெஸ்ஸி மற்றும் நெய்மார் தலா 1 கோல் வீதம் போட்டனர்.

சுவாரெஸ் தொடர்ச்சியாக 2ஆவது போட்டியில் 4 கோல்களை அடித்துள்ளார். நடப்புத் தொடரில் 34 கோல்களை அடித்துள்ள அவர், கிறிஸ்டியானோ ரொனால்டோவை (31 கோல்கள்) பின் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

ஆதாரம் : வீரகேசரி