சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஆகியோரது அதிரடியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>>முத்தரப்பு T20I தொடர்: நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் விலகல்
கண்டி பல்லேகலயில் பல்லாயிரக்கணக்கான இரசிகள் முன்னிலையில் இன்று (10) T20I தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை பங்களாதேஷ் தரப்பிற்கு வழங்கினார்.
இதன்படி முதலில் துடுப்பாடத் தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு பர்வேஸ் ஹொசைன் இமோன் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினார். வெறும் 22 பந்துகளை எதிர் கொண்ட அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் பெற்றார்.
அதன் பின்னர் பங்களாதேஷ் அணி குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த போதிலும் மொஹமட் நயீம் மெஹிதி ஹஸன் ஆகியோர் அவ்வணிக்கு நம்பிக்கை வழங்கினர். இதனால் அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்கள் பெற்றது.
பங்களாதேஷ் தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த மொஹமட் நயீம் 29 பந்துகளில் 32 ஓட்டங்கள் பெற, மெஹிதி ஹஸன் 23 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
>>இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் ஆகஸ்டில்?
இலங்கை T20I அணியின் பந்துவீச்சு சார்பில் மகீஷ் தீக்ஸன 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க தசுன் ஷானக்க, ஜெப்ரி வன்டர்செய் மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 155 ஒட்டங்களை அடையப் பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியானது குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் மூலம் மிகவும் அதிரடியான ஆரம்பத்தினைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி இப்போட்டியின் முதல் பவர்பிளேயில் 83 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் அது இலங்கை அணி T20I போட்டிகளில் முதல் பவர் பிளேயில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும் மாறியது.
இதனையடுத்து இலங்கை அணியானது முதல் மூன்று விக்கெட்டுக்களை இழந்த போதிலும் குசல் மெண்டிஸின் அபார அரைச்சதத்துடன் போட்டியின் வெற்றி இலக்கினை 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களுடன் போட்டியில் வெற்றியினைப் பதிவு செய்து கொண்டது.
இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் தன்னுடைய 16ஆவது T20I அரைச்சதம் அடங்கலாக 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் பெற்றார். பெதும் நிஸ்ஸங்க 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் சைபுதீன், மெஹிதி ஹஸன் மற்றும் ரிசாட் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்த போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Parvez Hossain Emon | c Dasun Shanaka b Maheesh Theekshana | 38 | 22 | 5 | 1 | 172.73 |
Tanzid Hasan | c Maheesh Theekshana b Nuwan Thushara | 16 | 17 | 2 | 0 | 94.12 |
Liton Das | lbw b Jeffery Vandersay | 6 | 11 | 0 | 0 | 54.55 |
Mohammad Naim | not out | 32 | 29 | 1 | 1 | 110.34 |
Towhid Hridoy | c Kusal Mendis b Dasun Shanaka | 10 | 13 | 0 | 0 | 76.92 |
Mehidy Hasan Miraz | c Charith Asalanka b Maheesh Theekshana | 29 | 23 | 4 | 0 | 126.09 |
Shamim Hossain | not out | 14 | 5 | 0 | 2 | 280.00 |
Extras | 9 (b 5 , lb 3 , nb 0, w 1, pen 0) |
Total | 154/5 (20 Overs, RR: 7.7) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chamika Karunaratne | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Nuwan Thushara | 4 | 0 | 32 | 1 | 8.00 | |
Binura Fernando | 3 | 0 | 22 | 0 | 7.33 | |
Maheesh Theekshana | 4 | 0 | 37 | 2 | 9.25 | |
Dasun Shanaka | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Jeffery Vandersay | 4 | 0 | 25 | 1 | 6.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Rishad Hossain b Mehidy Hasan Miraz | 42 | 16 | 5 | 3 | 262.50 |
Kusal Mendis | c Shamim Hossain b Mohammad Saifuddin | 73 | 51 | 5 | 3 | 143.14 |
Kusal Perera | c Liton Das b Rishad Hossain | 24 | 25 | 2 | 1 | 96.00 |
Avishka Fernando | not out | 11 | 17 | 0 | 0 | 64.71 |
Charith Asalanka | not out | 8 | 5 | 0 | 1 | 160.00 |
Extras | 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 159/3 (19 Overs, RR: 8.37) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohammad Saifuddin | 3 | 0 | 22 | 1 | 7.33 | |
Taskin Ahamed | 3 | 0 | 43 | 0 | 14.33 | |
Tanzim Hasan Sakib | 4 | 0 | 34 | 0 | 8.50 | |
Mehidy Hasan Miraz | 4 | 0 | 24 | 1 | 6.00 | |
Shamim Hossain | 1 | 0 | 11 | 0 | 11.00 | |
Rishad Hossain | 4 | 0 | 24 | 1 | 6.00 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<