பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான 35 வயதுடைய மஷ்ரபி மோர்தசா எதிர்வரும் பொதுத்தேர்தலில் அந்நாட்டின் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மோர்தசா, ஒருநாள் போட்டிகளில் அந்த அணியின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் பங்களாதேஷில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார்.
மில்லர், டு பிளேசிஸ் ஆகியோரின் சதங்களோடு ஒரு நாள் தொடர் தென்னாபிரிக்கா வசம்
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்த்திரேலிய …
பங்களாதேஷில் அடுத்த மாதம் 23ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மோர்தசாவை களமிறக்க பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி ‘லீக்’ முடிவு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிட மோர்தசாவும் சம்மதித்துவிட்டார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.
இதுஇவ்வாறிருக்க, கடந்த வாரம் வெளியான அந்நாட்டின் அனைத்து தேசிய நாளிதழ்களிலும் மோர்தசா, அந்நாட்டு பிரமரை சந்தித்த புகைப்படமொன்று முன்பக்கச் செய்தியாக பிரசுகரிக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
இதன்படி, பங்களாதேஷின் மேற்கு பகுதியில் அவரது சொந்த தொகுதியான நரேலில் மோர்தசா போட்டியிடுகிறார். ஆனால், இதுகுறித்து மோர்தசா வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், அவாமி லீக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான மஹ்புல் அலம் ஹனீப் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், பிரதமர் ஷேக் ஹசீனா இம்முறையும் பொதுத் தேர்தலில் களமிறங்கி 3ஆவது தடவையாகவும் பிரதமராவதற்கான மக்கள் வரத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளார். இதில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மஷ்ரபி மோர்தசாவும், பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலில் களமிறங்குவதற்கான சம்மதத்தையும் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஹபீஸின் விவகாரத்தில் டெய்லருக்கு எதிராக கொந்தளிக்கும் சர்ப்ராஸ்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் ….
தற்போது பங்களாதேஷ் அணிக்காக விளையாடி வரும் வீரர் அரசியலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஊடகப் பேச்சாளர் ஜலால் யூனுஸ் ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டுடன் அரசியலையும் சரிசமமாக செய்ய முடிந்தால் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. இதனால் மோர்தசா அரசியலில் களம் இறங்க எந்த சிக்கலும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் நுழைவதென்பது தெற்காசிய நாடுகளுக்கு புதிய விடயம் அல்ல. அங்குள்ள மில்லியன்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட் நட்சத்திரங்களை கடவுளைப் போல பக்தியுடன் பார்ப்பார்கள். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவராக இம்ரான் கான், அந்நாட்டின் பிரதமராக தெரிவாகியிருந்தார். அதேபோல, இந்தியாவின் நவ்ஜொத் சிங், இலங்கையின் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற முக்கிய கிரிக்கெட் வீரர்களான விளங்குகின்றனர்.
கடந்த 2009இல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் போட்டியில் 252 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்குப் பிறகு மஷ்ரபி மோர்தசா சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<