பாகிஸ்தானின் புதிய ஒருநாள் அணித் தலைவராக பாபர் அசாம்

0

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), பாகிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக முன்வரிசை துடுப்பாட்ட வீரரான பாபர் அசாமை நியமனம் செய்துள்ளது.  

கங்குலியுடன் என்ன நடந்தது? – கருத்து வெளியிட்டார் ரசல் அர்னோல்ட்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ரசல் அர்னோல்ட்…

கடந்த ஆண்டில் (2019), பாகிஸ்தானின் T20 அணித் தலைவராக மாறிய பாபர் அசாம் தற்போது ஒருநாள் அணித் தலைவராகவும் மாறியிருக்கின்றார். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எதிர்காலத்தில் பாபர் அசாமே பாகிஸ்தானை ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் வழிநடாத்துவார் எனத் தெரிவித்திருக்கின்றது.  

இதேவேளை, கடந்த ஆண்டு பாகிஸ்தானின் அனைத்துவகைப் போட்டிகளுக்குமான அணித்தலைவர் பதவியிலிருந்து சர்பராஸ் அஹ்மட் நீக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவராக நியமனம் செய்யப்பட்ட அஷார் அலி, பாகிஸ்தானை இனி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வழிநடாத்துவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.  

பாகிஸ்தானின் அணித்தலைவர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட  அந்நாட்டின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சிறந்த முடிவு ஒன்றை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.   

”நான் அஷார் அலி மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவருக்கும் தலைமைப் பதவி நீடிக்கப்பட்டது தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.” 

”உண்மையிலேயே இது சிறந்த முடிவாகும். இதனால், அவர்களுக்கு எதிர்காலத்தில் தங்கள் பொறுப்பு என்ன என்பது தொடர்பில் உறுதியாக  இருக்க முடியும். அவர்கள் இப்போது எதிர்கால திட்டங்களை தயாரிக்க ஆரம்பித்திருப்பார்கள் என நம்புகின்றேன். அதனால், அவர்களுக்கு எதிர்பார்த்த தரத்தினை பூர்த்தி செய்யக்கூடிய அணிகளை உருவாக்கி கொள்ளவும் முடியும்.”  என்றார். 

கடந்த 15 மாதங்களாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக செயற்பட்ட 25 வயது நிரம்பிய பாபர் அசாம் 54.17 என்கிற துடுப்பாட்ட சராசரியினைக் காட்டுவதோடு, ஒருநாள் அணிகளின் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 

4000 கோடி நஷ்டத்தை சந்திக்குமா BCCI??

இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகள் நடைபெறாது போனால் இந்திய…

இதுவரை ஐந்து T20 போட்டிகளில் பாகிஸ்தானை வழிநடாத்தியிருக்கும் பாபர் அசாம் இரண்டு போட்டிகளில் தனது தரப்பினை வெற்றிப்பாதையில் வழிநடாத்தியிருக்கின்றார். அதேநேரம், பாபர் அசாமிற்கு உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் மத்திய பஞ்சாப் அணியினையும், பாகிஸ்தான் சுபர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியினையும் வழிநடாத்திய அனுபவமும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக 2019ஆம் ஆண்டின் ஒக்டோபரிலேயே ஒருநாள் தொடரொன்றில் விளையாடிய பாகிஸ்தான் அணி, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்திலேயே தமது அடுத்த ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கின்றது. தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள குறித்த தொடர் உலகில் தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக நடைபெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<