கென்பெராவின் – மனூகா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 534 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடை நிறுத்தியதுடன், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி ஆட்டநேர முடிவில் 123 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் போது, அவுஸ்திரேலிய அணி 384 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று களமிறங்கியது. அவுஸ்திரேலிய அணி நிதானமாக துடுப்பாடி 400 ஓட்டங்களை கடந்தது. எனினும் துரதிஷ்டவசமாக 172 ஓட்டங்களுடன் களமிறங்கிய ஜோ பேர்ன்ஸ் 180 ஓட்டங்களுடன், கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இரட்டைச் சதத்தை தவறவிட்டார்.
இலங்கை அணியை தடுமாறச் செய்துள்ள ஆஸியின் துடுப்பாட்டம்
அவுஸ்திரேலியா – சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது …
தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் டிம் பெய்ன், குர்டிஸ் பெட்டர்சனுடன் இணைந்து நேர்த்தியாக ஓட்டங்களை குவித்தார். இதில் பெட்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாவது அரைச் சதத்தை கடந்து ஓட்டங்களை குவித்து வர, அவுஸ்திரேலிய அணி மதிய போசண இடைவேளையின் போது, 5 விக்கெட்டுகளை இழந்து 474 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
>>Photos : Sri Lanka Vs Australia 2nd Test – Day 2
இன்னிங்ஸ் இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் இருவரும் தேநீர் இடைவேளை வரை 13 ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
Video – தெரிவுக்குழுவில் பிழையில்லை, வீரர்கள் முன்னேற வேண்டும் – Cricket Kalam 06
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின்…
தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடிய இந்த ஜோடி, அவுஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை கொடுத்தது. இதில் 46 ஓட்டங்களை பெற்றிருந்த திமுத் கருணாரத்ன தனது அரைச் சதத்தை நெருங்கிய போது, அவுஸ்திரேலிய அணியின் 31 ஆவது பந்து ஓவரை பெட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 4 ஆவது பந்து பவுண்சர் பந்தாக வீசப்பட, குறித்த பந்து திமுத் கருணாரத்னவின் கழுத்து பகுதியை தாக்கியதில், அவர் கடுமையான உபாதைக்கு முகங்கொடுத்தார். இதனையடுத்து வைத்தியர்கள் அவருக்கு சிகிச்சையளிக்க, உடனடியாக ஸ்டெச்சர் மூலமாக வெளியேற்றப்பட்ட அவர், அம்புயூலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திமுத் கருணாரத்ன மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவரின் இடத்தை நிரப்புவதற்காக தினேஷ் சந்திமால் களமிறக்கப்பட்டார். எனினும் திமுத் கருணாரத்ன வெளியேறியதன் பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் நிதானமாக துடுப்பாடிய லஹிரு திரிமான்ன 41 ஓட்டங்களுடன், நெதன் லையனின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த குசல் மெண்டிஸ் (06), பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் தினேஷ் சந்திமால் ஓட்டங்களை பெறத் தொடங்கிய போதும், மிச்சல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் டிம் பெய்னிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடரை தீர்மானிக்கும் மோதலில் இலங்கை ஆஸியை எவ்வாறு எதிர்கொள்ளும்?
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி…
இறுதியாக குசல் பெரேரா 11 ஓட்டங்களுடனும், தனன்ஜய டி சில்வா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்க, இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்றுள்ளது. பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க் மற்றும் நெதன் லையன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதேவேளை, இலங்கை அணியானது, அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அடைவதற்கு இன்னும், 411 ஓட்டங்களை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















