ஆஸியின் வேகத்திற்கு முன் தனியாளாக போராடிய டிக்வெல்ல

1103

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனின் த கெப்பா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகலிரவு) முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிரோஷன் டிக்வெல்லவின் போராட்டமான துடுப்பாட்டத்தை தொடர்ந்து 144 ஓட்டங்களுக்கு சுருண்டிருக்கிறது. அதேநேரம் தங்களுடைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ள அவுஸ்திரேலிய அணி ஆட்டநேர நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சிறந்த ஆட்டத்தை தந்தால் மட்டுமே அதிசயத்தை நிகழ்த்த முடியும்: சந்திமால்

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறிய நிலையில், அவுஸ்திரேலிய அணியின் வேகம் முதல் நாள் ஆட்டத்தை முற்றுமுழுதாக தங்கள் வசப்படுத்தியிருக்கிறது. போட்டியை பொருத்தவரை நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இலங்கை அணி

திமுத் கருணாரத்னலஹிரு திரிமான்னகுசல் மெண்டிஸ்தனன்ஜய டி சில்வாதினேஷ்சந்திமால் (தலைவர்), ரொஷேன் சில்வாநிரோஷன் டிக்வெல்லடில்ருவான் பெரேராசுரங்கலக்மால்லஹிரு குமாரதுஷ்மந்த சமீர

அவுஸ்திரேலிய அணி

மார்கஸ் ஹெரிஸ், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா, ட்ராவிஷ் ஹெட், குர்டிஸ் பெட்டர்சன், மெர்னஸ் லெபுச்செங்டிம் பெய்ன் (தலைவர்), பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், ஜெய் ரிச்சட்சன், நெதன் லையன்

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் விக்கெட்டினை 26 ஓட்டங்களுக்கு பறிகொடுத்த நிலையில், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து வந்தது. சுமார் ஒரு வருடத்துக்கும் மேலான காலப்பகுதிக்கு பின்னர் அணியில் இணைக்கப்பட்ட லஹிரு திரிமான்னே ஏமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 12 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

Photos: Sri Lanka vs Australia 1st Test – Day 1

ThePapare.com | 24/01/2019

இதனைத் தொடர்ந்து துடுப்பாட்ட வரிசையில் முன்னேற்றத்துடன் இரண்டாவது வீரராக களமிறங்கிய அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 5 ஓட்டங்களுடன் வெளியேற, நிதானமாக ஓட்டங்களை குவித்து வந்த திமுத் கருணாரத்ன 24 (70) ஓட்டங்களுடனும், எதிர்பார்க்கப்பட்ட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இவர்களுக்கு அடுத்தாக களமிறங்கிய ரொஷேன் சில்வா களத்தில் தாக்குப்பிடித்து நின்ற போதும் ஓட்டங்களை பெறத் தவறி, 56 பந்துகளை எதிர்கொண்டு 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தனன்ஜய டி சில்வா 5 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்த நிலையில், தனக்கே உரிய பாணியில் துடுப்பெடுத்தாடிய நிரோஷன் டிக்வெல்ல வேகமாக ஓட்டங்களை குவித்தார். இவரின் இன்றைய ஆட்டம் இலங்கை அணியை மோசமான நிலையில் இருந்து சற்று மதிப்பான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி அழைத்துச் சென்றது. இவர், தன்னுடைய 11வது டெஸ்ட் அரைச்சதத்தை கடந்து 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு வெளியேறினர்.

இதன்படி, வெறும் 56.4 ஓவர்களை மாத்திரமே எதிர்கொண்ட இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 144 ஓட்டங்களுடன் சுருண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சினை பலப்படுத்திய பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், அறிமுக வீரர் ஜெய் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும், மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிக சூரிய வெளிச்சத்தால் தடைப்பட்ட நியூசிலாந்து இந்திய ஒருநாள் போட்டி

கிரிக்கெட் போட்டிகள் மழை, பனி, வெளிச்சமின்மை, மின்னல் போன்ற காரணங்களால் தடைப்படுவது உண்டு

இலங்கை அணியை குறைந்த ஓட்டங்களுடன் வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியானது இலங்கை அணியை விட சற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது. ஜோ பர்ன்ஸ் மற்றும் மார்கஸ் ஹெரிஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 37 ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும், இலங்கை அணிக்காக முதல் விக்கெட்டினை பெற்றுக்கொடுத்த சுரங்க லக்மால், ஜோ பர்ன்ஸை 12 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். இதனையடுத்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா, 11 ஓட்டங்களுடன் டில்ருவான் பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

எவ்வாறாயினும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்கஸ் ஹெரிஸ், இன்றைய ஆட்டநேர இறுதிவரை விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அவுஸ்திரேலிய அணி ஆட்டநேர நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இவ்வாறு துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இன்னும் 72 ஓட்டங்களை பெறவேண்டும்.

போட்டி சுருக்கம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க