Home Tamil மிச்சல் ஸ்டார்க்கின் வேகத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து

மிச்சல் ஸ்டார்க்கின் வேகத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து

310

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இன்றைய உலகக் கிண்ணப் போட்டியில் உஸ்மான் கவாஜாவின் நிதான ஆட்டம் மற்றும் மிச்சல் ஸ்டார்க்கின் அபார வேகப் பந்துவீச்சின் உதவியுடன் அவுஸ்திரேலிய அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இலண்டன் – எம்.சி.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதும், உஸ்மான் கவாஜா மற்றும் அலெக்ஸ் கெரி ஆகியோரின் நிதான துடுப்பாட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பெற்றுக்கொண்து.

ஆப்கான் வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட பாகிஸ்தான்

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of…

போட்டியின் ஆரம்பத்தில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள், அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்தனர். இந்த உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த ஆரம்ப ஜோடியாக இருந்த டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மத்தியவரிசை வீரர்களும் ஏமாற்றத்தை வழங்கினர்.

ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 92 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அலெக்ஸ் கெரி மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்ததுடன், பின்வரிசையில் பெட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜாவுடன் சிறிய இணைப்பாட்டத்தை பகிர்ந்து அணிக்கு தனது பங்கினை வழங்கினார்.

இதன்படி, அவுஸ்திரேலிய அணிசார்பில் அதிகபட்சமாக தனது 12வது ஒருநாள் அரைச்சதத்தை கடந்த உஸ்மான் கவாஜா 88 ஓட்டங்களையும், அலெக்ஸ் கெரி தனது 3வது அரைச்சதத்தை கடந்து 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களுக்கு அடுத்தப்படியாக பெட் கம்மின்ஸ் 23 ஓட்டங்களையும், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், லொக்கி பேர்கஸன் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் துடுப்பெடுத்தாடுவதற்கு சற்று கடினமான ஆடுகளத்தில் சவாலான வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லரின் இணைப்பாட்டத்துக்கு பின்னர், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், வில்லியம்சன் மற்றும் டெய்லர் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக 55 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். ஆனாலும், வில்லியம்சன் 40 ஓட்டங்களுடனும், டெய்லர் 30 ஓட்டங்களுடன் தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுக்க, அடுத்துவந்த துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

வில்லியம்சன் மற்றும் டெய்லரின் ஆட்டமிழப்புக்கு பின்னர், துடுப்பெடுத்தாடிய வீரர்களில் டொம் லேத்தம் மற்றும் மிச்சல் சென்ட்னர் ஆகியோர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை கடக்க, நியூசிலாந்து அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அவுஸ்திரேலிய அணிசார்பில் மிச்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், பெஹெரொன்ரொப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதேவேளை அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள அவுஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் தங்களுடைய முதலிடத்தை தக்கவைத்துள்ளது. எனினும், தோல்வியை தழுவியுள்ள நியூசிலாந்து அணி, அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும். இல்லையெனில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒவ்வொரு போட்டிகளில் தோல்வியடைந்தால் நியூசிலாந்து அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result


New Zealand
157/10 (43.4)

Australia
243/9 (50)

Batsmen R B 4s 6s SR
David Warner c & b 16 23 3 0 69.57
Aaron Finch lbw b 8 15 1 0 53.33
Usman Khawaja b 88 129 5 0 68.22
Steve Smith c & b 5 8 0 0 62.50
Marcus Stoinis c & b 21 26 3 0 80.77
Glenn Maxwell c & b 1 5 0 0 20.00
 Alex Carey c & b 71 72 11 0 98.61
Pat Cummins not out 23 19 1 0 121.05
Mitchell Starc b 0 1 0 0 0.00
Jason Behrendorff lbw b 0 1 0 0 0.00
Nathan Lyon not out 0 1 0 0 0.00


Extras 10 (b 0 , lb 3 , nb 0, w 7, pen 0)
Total 243/9 (50 Overs, RR: 4.86)
Bowling O M R W Econ
Trent Boult 10 1 51 4 5.10
Colin de Grandhomme 8 1 29 0 3.62
Lockie Ferguson 10 0 49 2 4.90
Ish Sodhi 6 0 35 0 5.83
Jimmy Neesham 6 0 28 2 4.67
Mitchell Santner 3 0 23 0 7.67
Kane Williamson 7 0 25 1 3.57


Batsmen R B 4s 6s SR
Martin Guptill lbw b 20 43 2 0 46.51
Henry Nicholls c & b 8 20 2 0 40.00
Kane Williamson c & b 40 51 2 1 78.43
Ross Taylor c & b 30 54 2 0 55.56
Tom Latham c & b 14 28 0 0 50.00
Colin de Grandhomme c & b 0 1 0 0 0.00
Jimmy Neesham c & b 9 22 0 0 40.91
Mitchell Santner c & b 12 29 0 1 41.38
Ish Sodhi lbw b 5 4 1 0 125.00
Lockie Ferguson b 0 3 0 0 0.00
Trent Boult not out 2 7 0 0 28.57


Extras 17 (b 4 , lb 3 , nb 0, w 10, pen 0)
Total 157/10 (43.4 Overs, RR: 3.6)
Bowling O M R W Econ
Jason Behrendorff 9 0 31 2 3.44
Mitchell Starc 9.4 1 26 5 2.77
Pat Cummins 6 1 14 1 2.33
Nathan Lyon 10 0 36 0 3.60
Steve Smith 2 0 6 1 3.00
Aaron Finch 1 0 7 0 7.00
Marcus Stoinis 2 0 12 0 6.00
Glenn Maxwell 4 0 18 0 4.50



முடிவு – அவுஸ்திரேலிய அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி