இலங்கை தொடரிலிருந்து வெளியேறும் ஸ்டீவ் ஸ்மித்

1027
Australia to take cautious approach with Smith

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட சகலதுறைவீரரான ஸ்டீவ் ஸ்மித், இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடரிலிருந்து வெளியேறியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> பஞ்சாப் கிங்ஸ் அணியில் பானுக ராஜபக்

ஸ்டீவ் ஸ்மித் சிட்னியில் நடைபெற்ற இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில், பௌண்டரி ஒன்றினை தடுக்க முயன்றிருந்தார். எனினும் குறித்த முயற்சி தோல்வியடைந்து அவருக்கு தலை உபாதை ஏற்பட்டிருந்தது.

இந்த உபாதையினைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, அவருக்கான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன.

இதேவேளை ஸ்டீவ் ஸ்மித்தின் உடல்நிலை தொடர்பில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடரின் எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து வெளியேறியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

அத்துடன் தலையில் ஏற்பட்ட உபாதையில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் குணமடைந்து வருவதாகவும் அது பூரண குணமடைவதற்கு இன்னும் 6-7 வரையிலான நாட்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் ஸ்மித்தின் இடத்தினை நிரப்புவதற்கு எந்த வீரர்களையும் அவுஸ்திரேலிய அணி அழைக்கவில்லை.

அத்துடன் ஸ்மித் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடுவதற்கு பூரண உடற்தகுதியுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> சாமிக்க கருணாரத்னவை வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடரில், அவுஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை அடைந்திருப்பதோடு, தொடரின் மூன்றாவது போட்டி நாளை (15) கென்பர்ராவில் நடைபெறுகின்றது.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<