மேற்கிந்திய தீவுகள் உடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிற்கான இங்கிலாந்து அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளரான கஸ் அட்கின்ஸன் வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>ரிஷப் பண்டிற்கு 30 இலட்சம் ரூபா அபராதம்!<<
27 வயது நிரம்பியன கஸ் அட்கின்ஸன் இங்கிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையில் இந்த வாரம் நடைபெற்றிருந்த டெஸ்ட் போட்டியில் தசை உபாதைக்குள்ளகியிருந்தார். குறிப்பிட்ட உபாதையின் பின்னரே அவருக்கு மேற்கிந்திய தீவுகள் உடனான ஒருநாள் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சரினை இழந்திருக்கும் இங்கிலாந்து அணிக்கு கஸ் அட்கின்ஸனின் உபாதையும் பாரிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. எனினும் கஸ் அட்கின்ஸன் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முன்னர் உடல்நிலை தேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக்!<<
கஸ் அட்கின்ஸனின் பிரதியீட்டு வீரர் தொடர்பில் இங்கிலாந்து அணியானது இன்னும் அறிவிப்பினை மேற்கொள்ளவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் தொடரின் போட்டிகள் இம்மாதம் 29ஆம் திகதி, ஜூன் 01 மற்றும் ஜூன் 03ஆம் திகதிகளில் முறையே பர்மிங்கம், கார்டிப் மற்றும் லண்டன் ஓவல் ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<