இலங்கையுடனான T20 தொடரில் அஸ்டன் டேர்னர் ஆடுவதில் சந்தேகம்

146
©GETTY IMAGES

தற்போது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த பயணத்தை நிறைவு செய்த பின்னர் அடுத்த மாத இறுதியில் அவுஸ்திரேலியா சென்று அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் ஆடவுள்ளது.

இந்நிலையில், விரல் உபாதையினை எதிர்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான அஸ்டன் டேர்னர் இந்த T20 தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றது. 

CPL தொடரில் 15 பந்துகளில் அரைச் சதம் கடந்து அசத்திய டுமினி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன்……

அஸ்டன் டேர்னர் கடந்த வாரம் அவுஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான மார்ஷ் கிண்ணத்தின் போட்டிகளுக்காக பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விரல் உபாதைக்கு ஆளாகியிருந்தார். குறித்த உபாதை காரணமாக அவருக்கு அடுத்த ஆறு வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதிலும் ஆட முடியாத நிலையும் உருவாகியிருந்தது.

அந்தவகையில்,  இந்த விரல் உபாதையே டேர்னருக்கு இலங்கை அணியுடனான T20 தொடரிலும் பங்கேற்க முடியாத நிலையினை உருவாக்கியிருக்கின்றது.  

அஸ்டன் இந்த வாரம் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரது சுண்டு விரலில் உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருந்தார். அதன் பின்னர் டேர்னரினை நாம் பரிசோதித்த போது அவருக்கு அடுத்த ஆறு வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் எதிலும் ஆட முடியாது என கூறப்பட்டது.” என அவுஸ்திரேலிய மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் டேர்னர் இலங்கை அணியுடனான T20 தொடரில் இல்லாமல் போவது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பாரிய இழப்பாக கருதப்படுகின்றது. ஏனெனில், அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிய ஒருநாள் தொடரில் டேர்னர், அவுஸ்திரேலிய அணி மிகப்பெரிய வெற்றி இலக்கு ஒன்றினை (358) விரட்ட தனது அதிரடி துடுப்பாட்டம் மூலம் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். 

இதேநேரம், டேர்னர் தான் உபாதைக்கு உள்ளாகிய மார்ஷ் கிண்ணத் தொடரிலும் கடைசியாக விளையாடிய போட்டியில் அரைச்சதம் ஒன்றினை விளாசி சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<