இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ILT20 மற்றும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக் போன்ற இரண்டு தொடர்களிலும் விளையாடவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சர்வதேச கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
>>ஓய்விலிருந்து மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பும் டி கொக்<<
ILT20 மற்றும் பிக் பேஷ் லீக் போன்ற இரண்டு தொடர்களும் ஒரே நேரத்தில் நடைபெறும் நிலையில், இதில் ஒரு தொடரில் அஸ்வின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்திகளின்படி இரண்டு தொடர்களிலும் அஸ்வின் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ILT20 தொடர் டிசம்பர் 4ஆம் திகதி முதல் ஜனவரி 4ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், பிக் பேஷ் லீக் டிசம்பர் 14ஆம் திகதி முதல் ஜனவரி 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
எனவே ILT20 தொடரில் விளையாடவுள்ள அஸ்வின், பிக் பேஷ் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர்ஸ், ஹோர்பார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் ஆகிய அணிகள் அஸ்வினை ஒப்பந்தம் செய்வதற்கு விரும்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<