T20 போட்டிகளில் அதிக வெற்றி – டோனியை முந்திய அஸ்கர் அப்கான்

240

இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் தலைவராக செயற்பட்டு அதிக வெற்றிகளையீட்டிய மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் அப்கான் முறியடித்தார்.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 3ஆவது T20 போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 3க்கு 0 என கைப்பற்றியது

இதன்மூலம் அதிக T20 போட்டிகளில் அணியை வழிநடத்தி வெற்றி பெற்ற தலைவராக தோனி படைத்த அரிய சாதனையை ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் அப்கான் முறியடித்தார்.

தோனி மொத்தம் 72 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி 41 வெற்றிகளை பெற்றுத்தந்தார். ஆனால் அஸ்கர் அப்கான் 52வது போட்டியிலேயே இந்த சாதனையை முறியடித்திருக்கிறார்

இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ், குருணால், பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு

தோனியின் வெற்றி சதவீதம் 60 ஆக காணப்பட, அஸ்கர் அப்கானின் வெற்றி சதவீதம் 80க்கும் அதிகமாக உள்ளது.

இதனிடையே, அதிக T20 போட்டிகளில் அணியை வழிநடத்தி வெற்றி பெற்ற தலைவர்கள் வரிசையில் 3வது இடத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் 33 வெற்றிகளுடன் உள்ளார்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சர்பராஸ் அஹமட் 29 வெற்றிகளுடன் 4ஆம் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி 27 வெற்றிகளுடன் 5ஆம் இடத்திலும் உள்ளனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…