மீண்டும் இங்கிலாந்து குழாத்தில் ஜொப்ரா ஆச்சர்!

England tour of South Africa 2023

225

தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து குழாத்தில் ஜொப்ரா ஆர்ச்சர் இணைக்கப்பட்டுள்ளார்.

ஜொப்ரா ஆர்ச்சர் முழங்கை உபாதை காரணமாக கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடவில்லை. முழங்கை உபாதையின் பின்னர் முதுகுப்பகுதியிலும் இவருக்கு உபாதை ஏற்பட்டிருந்தது.

வனிந்துவின் அதிரடி வீண்; கொழும்பு ஸ்டார்ஸ் இறுதிப் போட்டியில்

எனினும் குறிப்பிட்ட இந்த உபாதைகளிலிருந்து குணமடைந்துள்ள ஆர்ச்சர், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஜொப்ரா ஆர்ச்சர் அணிக்கு திரும்பியுள்ளதுடன், ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் இங்கிலாந்து அணியுடைய முதல் போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்துவீச்சாளர் ரீஷ் டொப்லேவும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அதேநேரம் டெஸ்ட் மற்றும் T20I போட்டிகளில் விளையாடிவரும் ஹெரி புரூக் மற்றும் பென் டன்கட் ஆகியோர் ஒருநாள் குழாத்துக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

அணியின் தலைவராக ஜோஸ் பட்லர் செயற்படவுள்ளதுடன், மொயீன் அலி, செம் கரன், ஆதில் ரஷீட் மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகிய முன்னணி வீரர்களும் ஒருநாள் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜனவரி 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 2வது போட்டி 29ம் திகதியும் மூன்றாவது போட்டி பெப்ரவரி முதலாம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து குழாம்

ஜோஸ் பட்லர் (தலைவர்), மொயீன் அலி, ஜொப்ரா  ஆர்ச்சர், ஹெரி புரூக், செம் கரன், பென் டக்கட், டாவிட் மலான், ஆதில் ரஷீட், ஜேசன் ரோய், பில் சோல்ட், ஒல்லி ஸ்டோன், ரீஷ் டொப்லே, டேவிட் வில்லி, கிரிஸ் வோக்ஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<