இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் நாள் மற்றும் T20I தொடர்களுக்கான தென்னாபிரிக்க குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க T20I குழாத்தில் இறுதியாக கடந்த ஆண்டு T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடியிருந்த என்ரிச் நோக்கியா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
>>ஜிம்பாப்வேயிடம் படுதோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி
நோக்கியாவின் வருகையுடன், எய்டன் மர்க்ரமின் தலைமையில் முழு பலமிக்க அணியாக தென்னாபிரிக்க அணியானது, இந்திய அணிக்கு எதிரான தொடரை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.
இதில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான காகிஸோ ரபாடா மாத்திரம் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I குழாத்தில் உபாதை காரமணாக இணைக்கப்படவில்லை.
T20I அணியின் தலைவராக எய்டன் மர்க்ரம் செயற்படவுள்ளதுடன், ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ள தெம்பா பௌவுமா தலைவர் பதவியை தொடரவுள்ளார். அதேநேரம் ஓய்விலிருந்து திரும்பியுள்ள குயிண்டன் டி கொக் இரண்டு குழாம்களிலும் இடத்தை தக்கவைத்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், T20I தொடர் டிசம்பர் 9ஆம் திகதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் குழாம்
தெம்பா பௌவுமா (தலைவர்), ஒட்டினில் பார்ட்மன், கோர்பின் போச், மெதிவ் பிரீட்ஷ்க், டெவால்ட் பிரேவிஸ், நண்ரே பர்கர், குயிண்டன் டி கொக், டொனி டி ஷோர்ஷி, ருபின் ஹேர்மன், கேஷவ் மஹாராஜ், மரார்கோ யான்சன், எய்டன் மர்க்ரம், லுங்கி என்கிடி, ரெயான் ரிக்கில்டன், பிரனெலன் சுப்ராயன்
T20I குழாம்
எய்டன் மர்க்ரம் (தலைவர்), ஒட்டினில் பார்ட்மன், கோர்பின் போச், , டெவால்ட் பிரேவிஸ், குயிண்டன் டி கொக், டொனி டி ஷோர்ஷி, டொனவன் பெரைரா, ரீஷா ஹென்ரிக்ஸ், மார்கோ யான்சன், கேஷ்வ் மாராஜ், ஜோர்ஜ் லிண்டே, குவனே மபாகா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, என்ரிச் நோக்கியா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<



















