உலக கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கான வீராங்கனைகள் தேர்வு (2)

126
அவுஸ்­தி­ரே­லி­யாவில் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களை முன்­னிட்டு இலங்கை வலைப்­பந்­தாட்டக் குழா­முக்கு அதி சிறந்த வீராங்­க­னை­களைத் தெரிவு செய்­வ­தற்­கான திற­மை­சா­லி­களை இனங்­காணும் தேடல் நிகழ்­வுகள் நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளன.
 
இதன் அடிப்­ப­டையில் வட மாகா­ணத்­திற்­கான தேர்­வுகள் யாழ்ப்­பாணம் வேம்­படி மகளிர் கல்­லூரி மைதா­னத்தில் இன்று  சனிக்­கி­ழமை 11ஆம் திகதி காலை 7.30 மணி முதல் தேர்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன.
 
வட மாகா­ணத்தில் ஐந்து மாவட்­டங்­க­ளி­லு­மி­ருந்தும் உய­ர­மான சிறந்த வலை­ப்பந்­தாட்ட வீராங்­க­னை­களை இத் தேர்வில் கலந்­து­கொள்ள வருகை தரு­மாறு இலங்கை வலைப்­பந்­தாட்ட சம்­மே­ளன இடைக்­கால நிர்­வாக சபை கோரி­யுள்­ளது.
 
இதே­வேளைஇ கண்டிஇ காலிஇ பொலன்­ன­றுவைஇ பதுளை ஆகிய மாவட்­டங்­களில் ஏப்ரல் 18ஆம் திகதியும் கொழும்பு மாவட்டத்தில் 19ஆம் திகதியும் தேர்வுகள் நடைபெறவுள் ளன.