பாகிஸ்தான் வீரர்களை இணைக்கும் புதிய CPL அணி

40

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான மொஹமட் ஆமீர், இமாத் வஸீம் மற்றும் பக்கார் சமான் ஆகியோரினை 2024ஆம் ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரில் என்டிகுவா & பார்புடா பல்கோன்ஸ் (The Antigua & Barbuda Falcons) அணி இணைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

என்டிகுவா & பார்புடா பல்கோன்ஸ் அணியானது மூன்று முறை சம்பியன் பட்டம் வென்ற ஜமெய்க்கா தல்லாவாஸ் அணியின் உரிமையாளர்கள் விலகியதனை அடுத்து 2024ஆம் ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது 

இந்த அணியிலேயே புதிய பருவத்திற்கான தொடரில் ஆட பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான மொஹமட் ஆமீர், இமாத் வஸீம் மற்றும் பக்கார் சமான் ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கின்றனர் 

2024 கரீபியன் பிரீமியர் லீக்கில் களமிறங்கும் இலங்கை வீரர்கள் 

அதேநேரம் புதிதாக உருவாக்கப்பட்ட என்டிகுவா & பார்புடா பல்கோன்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்களான பிரன்டண் கிங் மற்றும் பேபியன் அலன் ஆகிய வீரர்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் 

அடுத்த மாதம் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் நிரல்படுத்தல் நடைபெறவுள்ளதோடு அதன் மூலமாக என்டிகுவா & பார்புடா பல்கோன்ஸ் அணியானது தமது குழாத்தில் எஞ்சியிருக்கும் இடங்களுக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

என்டிகுவா & பார்புடா பல்கோன்ஸ் தற்போதைய குழாம் 

 

இமாத் வஸீம், பிரண்டன் கிங், பேபியன் அலன், அஸ்மத்துல்லா ஒமர்சாய்மொஹமட் ஆமீர், கிறிஸ் கீரின், பக்கார் சமான், ஹேய்டன் வேல்ஸ், சமார் ஸ்பிரிங்கர், கெவின் பிட்மன், ஜூவல் அன்ட்ரூ, ஜோசுவா ஜேம்ஸ் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<