இலங்கை முடிந்து விட்டது, பாகிஸ்தானைக் கொண்டு வாருங்கள் – குக்

1213
Alastair Cook
@Reuters

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 2-1 என வீழ்த்தியது. இதற்குப் பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறேன் என்று எலஸ்டயர்  குக் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 குழாம்

இங்கிலாந்து அணி கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானிடம் 1-2 என வீழ்ந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அடுத்த மாதம் 14ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

இந்த தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் தலைவர்  எலஸ்டயர்  குக் கூறுகையில் ‘‘நாங்கள் இலங்கை அணியை வயிட்வொஷ்  செய்யவில்லை என்றாலும், தொடரை 2-0 என வென்றுள்ளோம். ஒரு போட்டியில் இனிங்ஸ், மற்றொரு போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றுள்ளோம். பாகிஸ்தானைத் தவிர ஏறக்குறைய முக்கியமான அணிக்கெதிராக நாங்கள் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளோம்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து வந்து விளையாடும்போது அவர்களையும் வீழ்த்தி தொடரைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்றுள்ளோம். அத்துடன் சுழற்பந்து வீச்சாளர்களையும்  பெற்றுள்ளோம். அவர்களை சந்திக்கத் தயாராக இருக்கிறோம். கடந்த வருடம் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக ஓட்டங்களைக் குவித்தோம். ஆகவே, பாகிஸ்தான் தொடர் மிகச்சிறந்த தொடராக அமையும் என்று நினைக்கிறேன்” என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்