இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் எலஸ்டயர் குக் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கக் காத்திருக்கிறார்.
31 வயதாகும் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான எலஸ்டயர் குக் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 36 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளார். இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 2005ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எட்டினார். அப்போது சச்சினுக்கு வயது 32.
கிரிக்கட் வரலாற்றில் இன்றைய நாள் – மே 06
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் குக் 10,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டும் பட்சத்தில் குறைந்த வயதில் இந்த மைல்கல்லை எட்டிய சச்சினின் சாதனையை அவர் முறியடிப்பார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும், ஒட்டு மொத்தமாக 12ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கும்.
இந்த மைல்கல்லை சச்சின், லாரா, சங்கா ஆகியோர் 195 இன்னிங்ஸ்களிலேயே கடந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் – வீரகேசரி




















