ஐசிசி உலக பதினொருவர் அணியில் அப்ரிடி விளையாடுவது உறுதி

325
Getty Image

உலக பதினொருவர் அணிக்கு விளையாட உபாதையையும் பொறுப்படுத்தாத அப்ரிடி

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்த மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள T20 போட்டியில் மோதவுள்ள உலக பதினொருவர் அணியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சகலதுறை நட்சத்திரமான சஹீட் அப்ரிடி இடம்பெற்றிருந்தார்.

உலக பதினொருவர் அணிக்காக சஹீட் அப்ரிடி விளையாடுவதில் சந்தேகம்

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக, மேற்கிந்திய தீவுகள் ……….

மூட்டு வலி உபாதையிலிருந்து குணமாகாத காரணத்தினால் .சி.சி உலக பதினொருவர் அணியில் விளையாடுவதில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த அப்ரிடி, தற்போது குறித்த போட்டியில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இர்மா மற்றும் மரியா புயல் தாக்கியதில் மேற்கிந்திய தீவுகளின் 5 கிரிக்கெட் மைதானங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகின. இந்த மைதானங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக புயல் நிவாரண நிதி திரட்டும் வகையில் மேற்கிந்திய தீவுகள்உலக பதினொருவர் அணிகள் மோதும் T20 போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இப்போட்டிக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் ப்ரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். மறுமுனையில், உலக பதினொருவர் அணியை இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் இயன் மோர்கன் வழிநடத்தவுள்ளார்.  

அத்துடன், இப்போட்டிகளுக்காக பாகிஸ்தான் அணி சார்பாக நட்சத்திர வீரர் சஹீட் அப்ரிடியையும், சொயிப் மலிக்கையும் இணைத்துக்கொள்ள போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில், மூட்டு வலி உபாதை தொடர்பாக கடந்த 17ஆம் திகதி தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்த அப்ரிடி, “எனது உபாதைக்காக டுபாய் சென்று வைத்தியரிடம் ஆலோசனைப் பெற்றேன். அது முழுமையாக குணமாக இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்கள் எடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.  

இந்த அறிவிப்பினை அடுத்து போட்டியின் ஏற்பாட்டாளர்கள் மாத்திரமல்லாது. அப்ரிடியின் ரசிகர்களும் கவலைக்குள்ளாகியிருந்ததுடன், உபாதையிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என கருத்துக்களையும் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, அவர் குறித்த போட்டியில் விளையாடுவதற்காக தயாராக இருப்பதாக அறிவித்தார். இதுதொடர்பில் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட அப்ரிடி, “ஒரு கிரிக்கெட் வீரனாகவும், முஸ்லிமாகவும் இப்போட்டிக்கு எனது முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு தயாராகவுள்ளேன். உபாதையிலிருந்து மீள்வதற்கு 100 சதவீதம் வைத்தியரின் ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றேன். தேவையுடையவர்களுக்கு உதவும் வேண்டும் என இறைவன் கூறியுள்ளான். எனவே, எனது முழு சக்தியையும் அந்த மக்களுக்காக வழங்குவதற்கு தயாராகவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக உலக பதினொருவர் அணியில் இலங்கை சார்பாக திஸர பெரேரா கலந்துகொள்ளவுள்ள நிலையில், முதற்தடவையாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் உட்பட பல வெளிநாட்டு வீரர்களும் விளையாடவுள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<