Home Tamil இரண்டாம் இன்னிங்ஸில் பலம் பெறத் தொடங்கியுள்ள ஆப்கான் அணி

இரண்டாம் இன்னிங்ஸில் பலம் பெறத் தொடங்கியுள்ள ஆப்கான் அணி

140

சுற்றுலா ஆப்கான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் ஆப்கான் அணியானது இப்ராஹிம் சத்ரானின் அபார சதத்தோடு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்ட சரிவில் இருந்து மீண்டிருக்கின்றது. 

மெதிவ்ஸ், சந்திமால் சதங்களோடு வலுப்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது 410 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த சதீர சமரவிக்ரம 21 ஓட்டங்களோடு காணப்பட்டிருந்தார். 

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இன்று தொடர்ந்த இலங்கை அணியானது 439 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. இலங்கை அணியின் மத்திய வரிசையில் களமிறங்கியிருந்த சதீர சமரவிக்ரம 27 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

ஆப்கான் அணியின் பந்துவீச்சு சார்பில் நவீட் சத்ரான் 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, கைஸ் அஹ்மட் மற்றும் நிஜாட் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர் 

இதன் பின்னர் இலங்கையை விட 241 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த ஆப்கான் அணிக்கு நிதானமான ஆட்டத்துடன் இப்ராஹிம் சத்ரான் மற்றும் நூர் அலி சத்ரான் ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது 

இரண்டு வீரர்களும் ஆப்கான் அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 106 ஓட்டங்களை பகிர்ந்ததோடு ஆப்கான் அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த நூர் அலி சத்ரான் 47 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதன் பின்னர் இப்ராஹிம் சத்ரான் புதிய வீரராக களம் நுழைந்த றஹ்மாத் சாஹ்வுடன் இணைந்து ஆப்கான் அணிக்காக மீண்டும் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி வரும் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமானது நிறைவுக்கு வந்தது. 

அதன்படி மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் சந்தர்ப்பத்தில் இப்ராஹிம் சத்ரான் சதம் கடந்திருக்க ஆப்கான் அணி இரண்டாம் இன்னிங்ஸிற்காக 199 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்துள்ளது.   

ஆப்கான் அணியானது இலங்கையை விட 42 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கியிருக்க களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் இப்ராஹிம் சத்ரான் 101 ஓட்டங்களுடனும், றஹ்மத் சாஹ் 46 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர் 

போட்டியின் சுருக்கம்; 

Result


Sri Lanka
439/10 (109.2) & 56/0 (7.2)

Afghanistan
198/10 (62.4) & 296/10 (112.3)

Batsmen R B 4s 6s SR
Ibrahim Zadran lbw b Asitha Fernando 0 2 0 0 0.00
Noor Ali Zadran c & b Vishwa Fernando 31 46 5 0 67.39
Rahmat Shah c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 91 139 13 0 65.47
Hashmatullah Shahidi c Sadeera Samarawickrama b Vishwa Fernando 17 45 1 0 37.78
Nasir Jamal b Prabath Jayasuriya 0 7 0 0 0.00
Ikram Alikhil c Nuwanidu Fernando b Vishwa Fernando 21 50 3 0 42.00
Qais Ahmed lbw b Prabath Jayasuriya 21 44 1 1 47.73
Zia-ur-Rehman lbw b Vishwa Fernando 4 11 1 0 36.36
Nijat Masood c & b Asitha Fernando 12 24 1 1 50.00
Naveed Zadran  not out 0 6 0 0 0.00
Mohammad Saleem b Asitha Fernando 0 2 0 0 0.00


Extras 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total 198/10 (62.4 Overs, RR: 3.16)
Bowling O M R W Econ
Asitha Fernando 14.4 1 24 3 1.67
Vishwa Fernando 12 1 51 4 4.25
Chamika Gunasekara 9 1 50 0 5.56
Prabath Jayasuriya 25 7 67 3 2.68
Dhananjaya de Silva 2 0 6 0 3.00
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Noor Ali Zadran b Naveed Zadran  37 53 6 0 69.81
Dimuth Karunaratne c Ibrahim Zadran b Qais Ahmed 77 72 12 0 106.94
Kusal Mendis c Zia-ur-Rehman b Nijat Masood 10 22 1 0 45.45
Angelo Mathews hit-wicket b Qais Ahmed 141 259 14 3 54.44
Dinesh Chandimal c Ikram Alikhil b Naveed Zadran  107 181 10 1 59.12
Dhananjaya de Silva run out (Hashmatullah Shahidi) 0 1 0 0 0.00
Sadeera Samarawickrama c Rahmat Shah b Naveed Zadran  27 33 4 1 81.82
Chamika Gunasekara retired 16 27 2 0 59.26
Prabath Jayasuriya b Naveed Zadran  2 8 0 0 25.00
Vishwa Fernando not out 0 2 0 0 0.00
Asitha Fernando b Nijat Masood 0 1 0 0 0.00


Extras 22 (b 5 , lb 9 , nb 3, w 5, pen 0)
Total 439/10 (109.2 Overs, RR: 4.02)
Bowling O M R W Econ
Nijat Masood 19.2 3 76 2 3.96
Mohammad Saleem 12.1 0 57 0 4.71
Naveed Zadran  22.5 4 83 4 3.69
Zia-ur-Rehman 28 2 90 0 3.21
Qais Ahmed 22 2 98 2 4.45
Rahmat Shah 3 0 10 0 3.33
Hashmatullah Shahidi 2 0 11 0 5.50
Batsmen R B 4s 6s SR
Ibrahim Zadran b Prabath Jayasuriya 114 259 12 0 44.02
Noor Ali Zadran lbw b Asitha Fernando 47 136 5 0 34.56
Rahmat Shah c Sadeera Samarawickrama b Kasun Rajitha 54 119 5 0 45.38
Hashmatullah Shahidi c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 18 37 3 0 48.65
Nasir Jamal not out 41 67 5 1 61.19
Ikram Alikhil c Kusal Mendis b Asitha Fernando 1 6 0 0 16.67
Qais Ahmed c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 1 3 0 0 33.33
Zia-ur-Rehman b Prabath Jayasuriya 0 11 0 0 0.00
Naveed Zadran  b Prabath Jayasuriya 4 14 1 0 28.57
Nijat Masood c Sadeera Samarawickrama b Kasun Rajitha 0 0 0 0 0.00
Mohammad Saleem c Dhananjaya de Silva b Asitha Fernando 2 9 0 0 22.22


Extras 14 (b 1 , lb 6 , nb 1, w 6, pen 0)
Total 296/10 (112.3 Overs, RR: 2.63)
Bowling O M R W Econ
Vishwa Fernando 14 3 37 0 2.64
Asitha Fernando 21.3 2 63 3 2.96
Kasun Rajitha 20 5 59 2 2.95
Prabath Jayasuriya 47 10 107 5 2.28
Dhananjaya de Silva 10 1 23 0 2.30


Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne not out 32 22 3 1 145.45
Nishan Madushka not out 22 23 4 0 95.65


Extras 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 56/0 (7.2 Overs, RR: 7.64)
Bowling O M R W Econ
Zia-ur-Rehman 3 0 12 0 4.00
Naveed Zadran  3 0 30 0 10.00
Nijat Masood 1 0 5 0 5.00
Qais Ahmed 0.2 0 8 0 40.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<