அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அணியுடன் இணையும் மெதிவ் ரென்ஷோவ்

124
Matthew Renshaw
Image Courtesy - espncricinfo

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மெதிவ் ரென்ஷோவ், பிக்பேஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அணிக்காக மூன்று வருட ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

மெதிவ் ரென்ஷோவ் பிக்பேஷ் லீக்கின் கடந்த பருவகாலத்தில், பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடியிருந்தார். இவர், கடந்த பருவகாலத்தில் 348 ஓட்டங்களை குவித்து, அந்த அணியின் அதிக ஓட்ட எண்ணிக்கையை பெற்ற வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.

>> இலங்கை டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் தற்காலிக குழாம் அறிவிப்பு

அத்துடன், பந்துவீச்சிலும் அசத்தியிருந்த இவர், தனக்கு வழங்கப்பட்டிருந்த 23 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்தநிலையில், இந்த வருடத்துக்கான பருவகாலத்தில், அடிலெய்ட் அணி ரென்ஷோவை தங்களுடைய அணியில் இணைத்துள்ளது.

அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்த மெதிவ் ரென்ஷோவ், “அடிலெய்ட் ஸ்ரைக்கர் அணி எப்போதும் ஈர்க்கக்கூடிய அணி. அந்த அணியில் மூன்று வருடங்களுக்கு இணைந்திருப்பது மகிழ்ச்சி. 

அடிலெய்ட் ஓவல் மைதானத்தை என்னுடைய சொந்த மைதானமாக மாற்றிக்கொண்டு விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த மைதானத்தை நான் நன்கு அறிவேன் என்பதுடன், உலகின் மிகச்சிறந்த மைதானங்களில் ஒன்றாகவும் அடிலெய்ட் ஓவல் உள்ளது. 

அதுமாத்திரமின்றி சில சந்தர்ப்பங்களில் நாம் சொந்த ரசிகர்களுக்கு முன்னாள் விளையாட வாய்ப்புள்ளது என்பதுடன், அப்படி நடந்தால் ரசிகர்கள் மிகச்சிறந்த உற்சகாத்தை வழங்குவர் எனவும் நினைக்கிறேன்” என்றார்.

இதேவேளை மெதிவ் ரென்ஷோவ் அணிக்குள் வருகைத்தருவது தொடர்பில் அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜேசன் கில்லஸ்பி குறிப்பிடுகையில், “T20 கிரிக்கெட்டில் தனித்தன்மையுடன் தன்னை கடந்த இரண்டு பருவகாலங்களிலும் நிரூபித்து வரும் ரென்ஷோவை அணிக்கு வரவேற்கிறோம். அதேநேரம், அவர் ஒரு சிறந்த மனிதர், எதிர்வரும் மூன்று பருவகாலங்களுக்கும் அவரை அணியில் இணைப்பது குறித்து உற்சாகமடைகிறோம்” என்றார்.

>> Video – தனியாளாக சாதித்துக் காட்டிய Dinesh Chandimal | Cricket Galatta Epi 33

அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் குழாம்

ட்ராவிஷ் ஹெட் (தலைவர்), மைக்கல் நீஷர், ஹெரி நீல்சன், மெதிவ் ரென்ஷோவ், மெட் ஷோர்ட், பீட்டர் சிட்ல், கெமரோன் வெலன்டீ, ஜெக் வெதரெல்ட், ஜோன் வேல்ஸ், டேனியல் வோரல்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<