Home Tamil இளையோர் ஆசியக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் தோல்வி

இளையோர் ஆசியக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் தோல்வி

594

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், இன்று (10) பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினை எதிர்கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி  42 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியுள்ளது. 

இளையோர் ஆசியக் கிண்ணத்தில் குழு B அணிகளின் மோதலாக அமைந்த இப்போட்டியில் ஏற்கனவே இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுகளுக்கு தெரிவாகிய இலங்கை, பங்களாதேஷ் ஆகியவற்றின் இளம் அணிகள் மோதின. 

இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இலங்கை

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில்….

மொரட்டுவ நகரில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் தரப்பு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் இளம் அணிக்கு முன்வரிசையில் துடுப்பாடிய மஹ்முதுல் ஹசன் ஜோய் சதம் பெற்றுக் கொடுத்தார். இதேநேரம், மத்திய வரிசையில் துடுப்பாடிய தௌஹீத் ரித்தோய் அரைச்சதம் எடுத்திருந்தார்.  

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு பங்களாதேஷ் இளையோர் அணி, 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. 

பங்களாதேஷ் தரப்பின்  துடுப்பாட்டம் சார்பில் சதம் பெற்ற மஹ்முதுல் ஹசன் ஜோய் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 140 பந்துகளில் 126 ஓட்டங்கள் குவித்தார். இதேநேரம், தௌஹீத் ரித்தோய் 50 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், இலங்கை இளம் அணியின் பந்துவீச்சு சார்பில் டில்ஷான் மதுஷங்க 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்க்க, அஷேன் டேனியல் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 274 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற, இலங்கை இளையோர் அணி பதிலுக்கு துடுப்பாடியது. 

வெற்றி இலக்கினை அடையும் பயணத்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காண்பித்திருந்த இலங்கை இளையோர் அணி, 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 231 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது. 

இலங்கைத் தரப்பின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்திருந்த ரொஹான் சஞ்சய 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களை பெற்றிருந்தார். இந்நிலையில், ஏனைய வீரர்கள் அனைவரும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இளையோர் ஆசியக் கிண்ணத்தில் தோல்வி காணாத அணியாக இந்தியா

இலங்கையில் இடம்பெற்று வரும் இளையோர்…..

இதேநேரம், பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பில் றகிபுல் ஹசன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், சொரிபுல் இஸ்லாம் மற்றும் அஷ்ரபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியை உறுதி செய்திருந்தனர். 

இப்போட்டியின் மூலம் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்ய, பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி தாம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுகின்றது. 

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka U19
231/10 (47.4)

Bangladesh U19
273/7 (50)

Batsmen R B 4s 6s SR
Tanzid Hasan c Kamil Mishara b Dilshan Madusanka 17 28 2 0 60.71
Mahmudul Hasan c Kavindu Nadeeshan b Navod Paranavithana 126 140 12 2 90.00
Parvez Hossain lbw b Ashian Daniel 10 18 1 0 55.56
Tawhid Hridoy b Kavindu Nadeeshan 50 75 4 0 66.67
Shamim Hossain b Ashian Daniel 22 17 1 1 129.41
Akbar Ali c Kavindu Nadeeshan b Dilshan Madusanka 14 11 1 0 127.27
Shahadat Hossain not out 12 9 0 1 133.33
Mirttunjoy Chowdhury b Dilshan Madusanka 4 3 1 0 133.33
Rakibul Hasan not out 4 1 1 0 400.00


Extras 14 (b 0 , lb 0 , nb 2, w 12, pen 0)
Total 273/7 (50 Overs, RR: 5.46)
Fall of Wickets 1-30 (7.5) Tanzid Hasan, 2-56 (12.5) Parvez Hossain, 3-177 (38.5) Tawhid Hridoy, 4-209 (44.2) Shamim Hossain, 5-244 (46.3) Mahmudul Hasan, 6-264 (49.1) Akbar Ali, 7-269 (49.5) Mirttunjoy Chowdhury,

Bowling O M R W Econ
Ashian Daniel 9 0 39 1 4.33
Dilshan Madusanka 10 0 54 3 5.40
Chamindu Wijesinghe 5 0 27 0 5.40
Rohan Sanjaya 10 0 47 0 4.70
Kavindu Nadeeshan 10 0 76 1 7.60
Navod Paranavithana 6 0 30 1 5.00


Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Akbar Ali b Shoriful Islam 17 19 4 0 89.47
Kamil Mishara b Rakibul Hasan 33 51 4 0 64.71
Ravindu De Silva c Tanzid Hasan b Ashraful Islam 17 35 1 0 48.57
Ahan Wicrkamasinghe c & b Shamim Hossain 33 43 2 1 76.74
Nipun Dananjaya st Akbar Ali b Ashraful Islam 36 45 2 0 80.00
Avishka Tharindu c Parvez Hossain b Shoriful Islam 22 28 2 0 78.57
Kavindu Nadeeshan c Mahmudul Hasan b Rakibul Hasan 0 3 0 0 0.00
Chamindu Wijesinghe c Ashraful Islam b Rakibul Hasan 1 4 0 0 25.00
Rohan Sanjaya c Shahadat Hossain b Mirttunjoy Chowdhury 42 36 4 2 116.67
Ashian Daniel run out (Shamim Hossain) 5 5 1 0 100.00
Dilshan Madusanka not out 13 17 1 1 76.47


Extras 12 (b 0 , lb 8 , nb 0, w 4, pen 0)
Total 231/10 (47.4 Overs, RR: 4.85)
Fall of Wickets 1-22 (4.6) Navod Paranavithana, 2-65 (15.4) Kamil Mishara, 3-79 (18.5) Ravindu De Silva, 4-132 (28.5) Ahan Wicrkamasinghe, 5-151 (34.4) Nipun Dananjaya, 6-152 (35.2) Kavindu Nadeeshan, 7-162 (37.1) Chamindu Wijesinghe, 8-176 (38.6) Avishka Tharindu, 9-183 (40.5) Ashian Daniel, 10-231 (47.4) Rohan Sanjaya,

Bowling O M R W Econ
Shoriful Islam 9 0 39 2 4.33
Shamim Hossain 10 0 40 1 4.00
Mirttunjoy Chowdhury 8.4 0 38 1 4.52
Ashraful Islam 10 0 47 2 4.70
Rakibul Hasan 10 0 49 3 4.90



முடிவு – பங்களாதேஷ் இளையோர் அணி 42 ஓட்டங்களால் வெற்றி 


நேபாளம் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்

குழு B அணிகளில் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகாத ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நேபாளம் ஆகியவற்றின் 19 வயதுக்குட்பட்ட அணிகள் மோதிய இந்த போட்டியில் நேபாள அணி 160 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்தது. 

மேலும் இப்போட்டி மூலம் நேபாள இளையோர் கிரிக்கெட் அணி, ஆறுதல் வெற்றியொன்றினை பெற்ற வண்ணம் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரை நிறைவு செய்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

நேபாளம் – 2859 (50) – ரோஹிட் பௌடேல் 67, சுந்தீப் ஜோரா 48, ஆசிப் ஷேக் 45, ரஷீட் கான் 44, கமல் சிங்க் 41, சஞ்சித் சர்மா 26/3, ஆகாஷ தாஹிர் 62/3

ஐக்கிய அரபு இராச்சியம் – 125 (34.4) – விர்த்தியா அரவிந்த் 28, சகர் டக்கால் 20/3, சூர்யா டமங்க் 18/2, பவன் சர்ரப் 26/2, ரஷீட் கான் 26/2

முடிவு – நேபாள இளையோர் அணி 160 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<