Home Tamil இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இலங்கை A அணி

இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இலங்கை A அணி

Emerging team Asia Cup 2023

85
Emerging team Asia Cup 2023
Mohammad Haris (c) of Pakistan A celebrates after to stump to Avishka Fernando of Sri Lanka A during the ACC Men's Emerging Teams Asia Cup 2023 1st Semi-Final match between Sri Lanka A and Pakistan A at the P. Saravanamuttu International cricket Stadium, Colombo, Sri Lanka on July 21, 2023. Photo by: Pankaj Nangia / Creimas / Asian Cricket Council

இலங்கை A அணிக்கு எதிரான வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் A அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

கொழும்பு பி.சரா. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து சிறந்த முறையில் ஆட்டத்தை ஆரம்பித்தது.

>>வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசியக்கிண்ணம் ; ரசிகர்களுக்கு இலவச அனுமதி!

ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தது. எனினும் அந்த அணியின் முதல்  விக்கெட் 24 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

முதல் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின்னர் களமிறங்கிய ஒமைர் பின் யூசுப் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்றை வெளிப்படுத்தினார். ஏனைய வீரர்களிடமிருந்து கிடைத்த சிறிய பங்களிப்புகளுடன் ஓட்ட எண்ணிக்கையை நகர்த்தியது மாத்திரமின்றி தன்னுடைய அரைச்சதத்தையும் அவர் கடந்தார்.

மொஹமட் டையாபுடன் இணைந்து 61 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மொஹமட் ஹாரிஸுடன் இணைந்தும் 48 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், 88 ஓட்டங்களுடன் சதத்தை தவறவிட்டு துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் மொஹமட் ஹாரிஸ், முபசிர் கானுடன் இணைந்து இன்னிங்ஸின் அதிகூடிய இணைப்பாட்டமாக 73 ஓட்டங்களை பகிர்ந்து அரைச்சதத்தை பதிவுசெய்தார்.

மொஹமட் ஹரிஸ் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, முபசிர் கானும் 42 ஓட்டங்களை பெற பாகிஸ்தான் A அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 322 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு சமரகோன், சாமிக்க கருணாரத்ன மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை A அணி ஆரம்பம் முதல் தடுமாறியிருந்தது. ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த போது லசித் குரூஸ்புள்ளே ஆட்டமிழக்க, தொடர்ச்சியாக மினோத் பானுக மற்றும் பசிந்து சூரியபண்டார ஆகியோர் பெவிலியன் திரும்பினர்.

இதன்மூலம் இலங்கை அணி 33 ஓட்டங்களுக்கு முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் மூவரை இழந்திருந்தது. அணி தடுமாற்றத்தை சந்தித்திருந்த தருணத்தில் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டமொன்றை பகிர்ந்தனர்.

>>WATCH – தோல்விக்கான இரண்டு காரணங்களை கூறும் திமுத் கருணாரத்ன! | Sri Lanka vs Pakistan 2023

துடுப்பாட்டத்தை வழிநடத்திய அவிஷ்க பெர்னாண்டோ அரைச்சதத்தை கடக்க, மறுமுனையில் நிதானமாக சஹான் ஆராச்சிகே ஓட்டங்களை பெற்றார். இவர்கள் இருவரும் 128 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றபோது அவிஷ்க பெர்னாண்டோ 97 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சில ஓவர்களில் அஷேன் பண்டார வெளியேறினார். எனவே 180 ஓட்டங்களுக்கு இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் தடுமாற தொடங்கியது.

சஹான் ஆராச்சிகே மாத்திரம் தனியாளாக போராட மறுமுனையில் களமிறங்கிய துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரத்ன போன்ற முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு பக்கம் தனியாளாக போராடிய சஹான் ஆராச்சிகே 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 262 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அர்ஷாட் இக்பால் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்த, முபாஷிர் கான் மற்றும் சுப்யான் முகீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேநேரம், இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் A அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Sri Lanka A Team
262/10 (45.4)

Pakistan A Team
322/10 (50)

Batsmen R B 4s 6s SR
Saim Ayub c Minod Bhanuka b Chamika Karunarathne 22 41 3 0 53.66
Sahibzada Farhan b Lahiru Samarakoon 12 22 1 0 54.55
Omair Yousuf c Sahan Arachchige b Pramod Madushan 88 79 10 1 111.39
Tayyab Tahir c & b Sahan Arachchige 26 26 4 0 100.00
Qasim Akram lbw b Dunith Wellalage 8 9 1 0 88.89
Mohammad Haris b Lahiru Samarakoon 52 43 5 0 120.93
Mubasir Khan run out () 42 45 2 2 93.33
Amad Butt c & b Pramod Madushan 7 11 0 0 63.64
Mohammad Wasim Jnr c Dunith Wellalage b Chamika Karunarathne 24 17 1 2 141.18
Sufiyan Muqeem run out () 6 3 1 0 200.00
Arshad Iqbal not out 10 4 0 1 250.00


Extras 25 (b 10 , lb 6 , nb 0, w 9, pen 0)
Total 322/10 (50 Overs, RR: 6.44)
Bowling O M R W Econ
Sahan Arachchige 8 0 43 1 5.38
Lahiru Samarakoon 7 0 42 2 6.00
Pramod Madushan 10 0 56 2 5.60
Dunith Wellalage 10 1 41 1 4.10
Chamika Karunarathne 7 0 55 2 7.86
Dushan Hemantha 5 0 48 0 9.60
Ashen Bandara 3 0 21 0 7.00


Batsmen R B 4s 6s SR
Avishka Fernando st Mohammad Haris b Sufiyan Muqeem 97 85 12 2 114.12
Lasith Croospulle c Mohammad Wasim Jnr b Amad Butt 0 2 0 0 0.00
Minod Bhanuka lbw b Arshad Iqbal 1 8 0 0 12.50
Pasindu Sooriyabandara c Mohammad Wasim Jnr b Arshad Iqbal 10 9 2 0 111.11
Sahan Arachchige b Mubasir Khan 97 109 12 1 88.99
Ashen Bandara c Sahibzada Farhan b Sufiyan Muqeem 17 12 4 0 141.67
Dunith Wellalage b Mubasir Khan 14 27 1 0 51.85
Chamika Karunarathne c Tayyab Tahir b Arshad Iqbal 10 10 1 0 100.00
Dushan Hemantha c Omair Yousuf b Arshad Iqbal 0 2 0 0 0.00
Lahiru Samarakoon b Arshad Iqbal 5 10 1 0 50.00
Pramod Madushan not out 1 1 0 0 100.00


Extras 10 (b 4 , lb 1 , nb 1, w 4, pen 0)
Total 262/10 (45.4 Overs, RR: 5.74)
Bowling O M R W Econ
Amad Butt 6 0 36 1 6.00
Arshad Iqbal 7.4 0 37 5 5.00
Mohammad Wasim Jnr 7 0 47 0 6.71
Mubasir Khan 9 0 45 2 5.00
Sufiyan Muqeem 10 1 44 2 4.40
Qasim Akram 6 0 48 0 8.00
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<