இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை

360

2009ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூர் நகரத்தில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர்இ பாகிஸ்தான் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன்இ தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது இவர்கள் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹபீஸ் அலியாஸ் மொஹமட் என்பவரே இந்த நடவடிக்கையின் போதுஇ உயிரிழந்துள்ளார்.