கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய பதவியை இராஜினாமா

271

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இவர் தனது இராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை, தெரிவுக்குழுவில் உள்ள ஏனைய சில உறுப்பினர்களும் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரிய கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது