இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் T20 போட்டியில் இங்கிலாந்து டக்வத் லூயிஸ் முறையில் 11 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>>தென்னாபிரிக்காவினை வீழ்த்திய இலங்கை இளையோர் அணி<<
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்கள் ஒருநாள் தொடரினை அடுத்து தற்போது T20 தொடரில் ஆடுகின்றனர். அதன்படி T20 தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (30) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஹர்ரி புரூக் முதலில் இலங்கையைப் துடுப்பாட பணித்தார். இப்போட்டிக்கான இலங்கை குழாத்தில் மதீஷ பதிரண மற்றும் எஷான் மாலிங்க ஆகியோர் இணைந்திருந்தனர்.
இலங்கை XI
பெதும் நிஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன, தசுன் ஷானக்க (தலைவர்), மதீஷ பதிரண, எஷான் மாலிங்க
மழையின் காரணமாக அணிக்கு 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கைக்கு சிறந்த ஆரம்பமொன்று அமைந்த போதும் தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க போன்ற வீரர்கள் மத்திய வரிசையில் சொதப்பியதன் காரணமாக 16.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை 133 ஓட்டங்களை மட்டுமே எடுத்துக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்கள் பெற்றார். அதேவேளை பெதும் நிஸ்ஸங்க 23 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
>>மே.இ.தீவுகள் செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி<<
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சேம் கர்ரன் ஹெட்ரிக் அடங்கலாக 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, ஆதில் ரஷீட்டும் 3 விக்கெட்டுக்களை சுருட்டினார். அதேவேளை லியாம் டாவ்சன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகிய வீரர்களும் தலா 2 விக்கட் வீதம் கைப்பற்றினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 134 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து தரப்பு 15 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்கள் பெற்றிருக்க போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட்டது. போட்டியினை இதன் பின்னர் தொடர முடியாத நிலை உருவாக இங்கிலாந்து 11 ஓட்டங்களால் டக்வத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் பிலிப் சோல்ட் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் பெற்றார். இலங்கைப் பந்துவீச்சில் எஷான் மாலிங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் அது பிரயோஜனமாகவில்லை.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷீட் தெரிவாகியிருந்தார். இந்த T20I தொடரின் அடுத்த போட்டி ஞாயிற்றுக்கிழமை (01) ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Result
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Pathum Nissanka | c Jos Buttler b Adil Rashid | 23 | 20 | 3 | 1 | 115.00 |
| Kamil Mishara | c Liam Dawson, b Jamie Overton | 16 | 9 | 2 | 1 | 177.78 |
| Kusal Mendis | c Jamie Overton b Adil Rashid | 37 | 20 | 4 | 2 | 185.00 |
| Charith Asalanka | c Jacob Bethell b Liam Dawson, | 2 | 5 | 0 | 0 | 40.00 |
| Dhananjaya de Silva | c Tom Curran b Adil Rashid | 11 | 12 | 1 | 0 | 91.67 |
| Janith Liyanage | lbw b Liam Dawson, | 1 | 2 | 0 | 2 | 50.00 |
| Dasun Shanaka | c Harry Brook b Sam Curran | 20 | 16 | 0 | 0 | 125.00 |
| Wanindu Hasaranga | b Jamie Overton | 14 | 12 | 2 | 0 | 116.67 |
| Mahesh Theekshana | c Jamie Overton b Sam Curran | 0 | 1 | 0 | 0 | 0.00 |
| Matheesha Pathirana | b Sam Curran | 0 | 1 | 0 | 0 | 0.00 |
| Eshan Malinga | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
| Extras | 9 (b 4 , lb 2 , nb 0, w 3, pen 0) |
| Total | 133/10 (16.2 Overs, RR: 8.14) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Sam Curran | 3 | 0 | 38 | 3 | 12.67 | |
| Joe Root | 3 | 0 | 22 | 0 | 7.33 | |
| Jamie Overton | 2.2 | 0 | 17 | 2 | 7.73 | |
| Liam Dawson, | 4 | 0 | 31 | 2 | 7.75 | |
| Adil Rashid | 4 | 0 | 19 | 3 | 4.75 | |
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Phil Salt | c Dunith Wellalage b Dasun Shanaka | 46 | 35 | 2 | 1 | 131.43 |
| Jos Buttler | b Eshan Malinga | 17 | 10 | 4 | 0 | 170.00 |
| Jacob Bethell | c Dasun Shanaka b Eshan Malinga | 9 | 11 | 2 | 0 | 81.82 |
| Tom Banton | c Charith Asalanka b Matheesha Pathirana | 29 | 15 | 1 | 0 | 193.33 |
| Harry Brook | not out | 16 | 18 | 0 | 0 | 88.89 |
| Sam Curran | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
| Extras | 7 (b 0 , lb 4 , nb 0, w 3, pen 0) |
| Total | 125/4 (15 Overs, RR: 8.33) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Mahesh Theekshana | 3 | 0 | 31 | 0 | 10.33 | |
| Matheesha Pathirana | 4 | 0 | 18 | 1 | 4.50 | |
| Eshan Malinga | 2 | 0 | 24 | 2 | 12.00 | |
| Wanindu Hasaranga | 4 | 0 | 36 | 0 | 9.00 | |
| Dasun Shanaka | 2 | 0 | 12 | 1 | 6.00 | |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















