இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணி பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியுடன் மட்டுப்படுத்தபட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
>>T20 உலகக்கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு<<
அதன்படி இந்தச் சுற்றுப்பயணத்தின் போது இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளன.
இந்த சுற்றுப்பயணத்தின் அனைத்துப் போட்டிகளும் கிரெனடாவில் உள்ள கிரெனடா தேசிய மைதானத்தில் நடைபெறவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இலங்கை மகளிர் அணியின் சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ஒருநாள் தொடரும், அதன் பின்னர் T20 தொடரும் இடம்பெறுகின்மை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சுற்றுத் தொடர் அட்டவணை
| திகதி | போட்டி | மைதானம் |
| பெப்ரவரி 20 | முதல் ஒருநாள் போட்டி | கிரெனடா |
| பெப்ரவரி 22 | இரண்டாவது ஒருநாள் போட்டி | கிரெனடா |
| பெப்ரவரி 25 | மூன்றாவது ஒருநாள் போட்டி | கிரெனடா |
| பெப்ரவரி 28 | முதலாவது T20I போட்டி | கிரெனடா |
| மார்ச் 01 | இரண்டாவது T20I போட்டி | கிரெனடா |
| மார்ச் 03 | மூன்றாவது T20I போட்டி | கிரெனடா |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















