இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், முதலில் துடுப்பாட்டத்தினை நிறைவு செய்திருக்கும் இலங்கை வீரர்கள் 272 ஓட்டங்களை 50 ஓவர்களில் இங்கிலாந்திற்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்திருக்கின்றனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் முடிவுக்கு பாகிஸ்தான் ஆதரவு
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்கள் ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுகின்றனர். இதில் இரண்டு அணிகளும் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் முதலாவதாக நடைபெறும் நிலையில், முதல் ஒருநாள் போட்டி முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்காகப் பெற்றிருந்தார்.
இப்போட்டிக்கான இலங்கை குழாம் நீண்ட இடைவெளியின் பின்னர் தனன்ஞய டி சில்வாவினை இணைத்திருந்தது.
இலங்கை XI
பெதும் நிஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷான், ஜெப்ரி வான்டர்சே, அசித பெர்னாண்டோ
பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய போட்டியின் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்த பெதும் நிஸங்க மற்றும் கமில் மிஷாரா ஆகியோர் நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 50 ஓட்டங்களைச் சேர்த்தனர். தொடர்ந்து பெதும் நிஸ்ஸங்க 21 ஓட்டங்களிலும், மிஷார 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து களம் வந்த குசல் மெண்டிஸ், ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் போராடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். அவர் ஜனித் லியனகே மற்றும் துனித் வெல்லாலகே உடன் பெற்றுக் கொண்ட இணைப்பாட்டங்கள் காரணமாக இலங்கை அணியானது 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்கள் பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் IFS நிறுவனம்
இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 117 பந்துகளில் 11 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்கள் குவித்திருக்க, ஜனித் லியனகே 53 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் இறுதி ஓவர்களில் துனித் வெல்லாலகே அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 25 பெற்றார். அதில் 3 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஆதில் ரஷீட் சிறப்பாகச் செயற்பட்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
தற்போது 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது. இலங்கையின் பந்துவீச்சாளர்கள் இந்த வெற்றி இலக்கினைத் தக்கவைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















