பாகிஸ்தான் T20 தொடரிற்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு

2

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கெடுக்கும் 17 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணியானது அதற்கு ஆயத்தமாகும் வகையில்பாகிஸ்தான் சென்று அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடுகின்றது 

சாதனைகளுடன் இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி

இந்த நிலையில் இந்த தொடரில் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் பெறாத மெஹ்லி பியர்ட்மேன் மற்றும் ஜேக் எட்வார்ட்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்இரண்டு வீரர்களும் தற்போது நடைபெற்று வருகின்ற பிக் பேஷ் லீக் தொடரில் சிறப்பாக பந்துவீசியிருந்த நிலையில் தேசிய அணிக்கான வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர்.   

அதேநேரம் அவுஸ்திரேலியா T20 உலகக் கிண்ண அணியில் இடம்பெற்ற வீரர்களில் 10 பேருக்கு மாத்திரமேபாகிஸ்தான் T20 தொடரில் வாய்ப்பு வழங்கியிருக்கின்றது 

இதேநேரம் நதன் எல்லிஸ்டிம் டேவிட்ஜோஷ் ஹேசல்வூட்கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் வெவ்வேறு காரணங்களினைக் கருத்திற் கொண்டு பாகிஸ்தான் தொடரில் வாய்ப்பினை பெறவில்லை 

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான T20 தொடரின் மூன்று போட்டிகளும் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஜனவரி 29, 31 மற்றும் பெப்ரவரி 1 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அவுஸ்திரேலிய T20 குழாம்:   

மிச்செல் மார்ஷ் (தலைவர்), ஷோன் அப்போட்ஷேவியர் பார்ட்லெட்மெஹ்லி பியர்ட்மேன்கூப்பர் கொன்னோலிபென் டுவார்ஷுயிஸ்ஜேக் எட்வர்ட்ஸ்கேமரூன் கிரீன்டிராவிஸ் ஹெட்ஜோஷ் இங்கிலீஸ்மெதிவ் குஹ்னமென்மிட்ச் ஓவன்ஜோஷ் பிலீப்பேமெதிவ் ரென்ஷோமெதிவ் ஷோர்ட்மார்கஸ் ஸ்டோய்னிஸ்அடம் ஷம்பா. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<