T20 உலகக் கிண்ணத்திற்கான கனடா அணிக்குழாம் வெளியீடு

10
canada-t20-world-cup-2026-squad

இந்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் கனடாவின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>அக்குறனை அஸ்ஹர் இளம் அணிக்கு அசத்தல் வெற்றி<<

இரண்டாவது முறையாக T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடவிருக்கும் கனடா அணியானது தில்ப்ரீத் பஜ்வா மூலம் வழிநடாத்தப்படவிருக்கின்றது. T20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அபாரமாக விளையாடிய கனடா, தொடரில் தாம் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2026ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கனடா T20 உலகக் கிண்ணத் தொடரில் குழு D இல் இடம் பெற்றுள்ளது. கனடாவின் குழுவில் தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை ஏனைய அணிகளாக உள்ளன. கனடா தனது முதல் போட்டியை பெப்ரவரி 9ஆம் திகதி அஹமதாபாத்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிராக விளையாடுகின்றது.

கனடா குழாம்:

 

தில்ப்ரீத் பஜ்வா (தலைவர்), அஜய்வீர் ஹுண்டால், அன்ஷ் பட்டேல், டிலோன் ஹெய்லிகர், ஹர்ஷ் தாக்கர், ஜஸ்கரன்தீப் பட்டார், கலீம் சனா, கன்வர்பால் தத்கர், நவ்னீத் தாலிவால், நிகோலஸ் கிர்டன், ரவீந்தர்பால் சிங், சாட் பின் ஷபர், சிவம் சர்மா, ஸ்ரேயாஸ் மொவ்வா, யுவ்ராஜ் சம்ரா

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<