மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறை வீரரான அன்ரே ரசல் IPL தொடரிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
IPL ஏலம் இம்மாதம் நடைபெறவுள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்காக கடந்த 12 வருடங்களாக விளையாடிவந்த இவர், திடீர் ஓய்வை அறவித்துள்ளார்.
>>இந்தியா செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி<<
கொல்கத்தா அணிக்காக 12 கோடி ரூபாவுக்காக வாங்கப்பட்ட இவர், இந்த ஆண்டு ஏலத்துக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்காக விளையாடி வருகின்றார்.
இந்த ஆண்டு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு அணியில் விளையாட தயார் இல்லை என்பதால் அன்ரே ரசல் IPL தொடரிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
அன்ரே ரசல் IPL தொடரில் 140 போட்டிகளில் விளையாடி 174.18 ஓட்ட வேகத்தில் 2651 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 123 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேநேரம் இவர் விளையாடிய காலப்பகுதியில் 2014 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.
தற்போது அன்ரே ரசல் ஓய்வை அறிவித்துள்ள போதும், கொல்கத்தா அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் ஒருவராக (Power Coach) இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















