அடுத்த ஆண்டு (2026) இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெறும் ஆடவர் T20 உலகக் கிண்ணம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
>>நீயூசிலாந்து டெஸ்ட் குழாத்தில் மீண்டும் கேன் வில்லியம்சன்<<
அதன்படி இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஒரே குழுவில் இடம்பெறும் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் பங்கெடுக்கும் பரபரப்புமிக்க குழுநிலை மோதல் 2026ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மும்பையில் இருந்து வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், குறிப்பிட்ட போட்டியானது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
அதேவேளை குறிப்பிட்ட போட்டி ஆடவர் T20 உலகக் கிண்ண நடப்புச் சம்பியன்களான இந்தியாவின் மூன்றாவது குழுநிலை மோதலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தெரிவாகும் சந்தர்ப்பத்தில் போட்டிகள் அஹமதாபாத், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலும், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் சந்தர்ப்பதில் குறித்த போட்டி மும்பையில் நடைபெறும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.
மற்றைய அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தெரிவுகளை கருத்திற்கொண்டு இந்தியா அல்லது இலங்கையில் நடைபெறுவது தீர்மானிக்கடவிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















