ஆசியக் கிண்ண பாகிஸ்தான் குழாத்தில் பாபர், ரிஸ்வான் நீக்கம்

38
Asia Cup 2025 - Pakistan squad announced

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20 தொடரில் பங்கெடுக்கும் 17 பேர் அடங்கிய பாகிஸ்தான் குழாம் அந்த நாட்டு கிரிக்கெட் சபை (PCB) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

>>இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஜேர்சி அறிமுகம்<<

செப்டம்பர் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை 2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20 தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தான் குழு A இல் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த நிலையில் 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தானின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம், முஹம்மட் ரிஸ்வான், ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் T20 அணியின் தலைவராக தொடர்ந்து சல்மான் அலி அகா செயற்பட அனுபவ வீரர் பக்கர் சமான், ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், ஹசன் அலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர். அதேவேளை சயிம் அயூப், ஹசன் நவாஸ், முகமட் ஹாரிஸ் உள்ளிட்ட வீரர்களுக்கும் ஆசியக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் அதன் முன்னாள் அணித்தலைவருமான பாபர் அசாம் இதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் ஆசியக் கிண்ணத் தொடரில் முதன் முறையாக விளையாடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார்.

அத்துடன் பாகிஸ்தான் ஆசியக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் விதமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் சென்று அங்கே ஐக்கிய அரபு இராச்சியம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கெடுக்கும் முத்தரப்பு T20 தொடரில் பங்கெடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குழாம்

 

சல்மான் அலி அகா (தலைவர்), அப்ரார் அகமட், பஹீம் அஷ்ரப், பக்கர் சமான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷாஹ், மொஹமட் ஹாரிஸ், மொஹமட் நவாஸ், மொஹமட் வசீம் ஜூனியர், சாஹிப்சதா பர்ஹான், சயிம் ஆய்யூப், சல்மான் மிர்ஸா, ஷஹீன் அப்ரிடி, சுபியான் முக்கீம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<