இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20I தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, வனிந்து ஹஸரங்கவின் வலது காலில் தொடை தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டது.
>>ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரிற்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு<<
எனவே அவரால் T20I போட்டிகளில் விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கான மாற்றீடு வீரர்கள் எவரையும் இலங்கை அணி இணைக்கவில்லை.
தொடர்ந்து தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்துவரும் வனிந்து ஹஸரங்க, இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மையத்தில் சிகிச்சைகளையும், குணமடைவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டி நாளை (10) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<