ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Bangladesh Tour of Sri Lanka 2025

120
Sri Lanka Squad

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்திலிருந்து கடைசியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலிருந்து ஒருசில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

>>தென்னாப்பிரிக்க T20I அணியின் தலைவர் பதவியிலும் மாற்றம்<<

அவுஸ்திரேலிய தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த நுவனிது பெர்னாண்டோ, வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் சிராஸ் மற்றும் லஹிரு குமார ஆகியோர் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரமவுடன், வேகப்பந்துவீச்சாளர் மிலான் ரத்நாயக்க ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இதில் மிலான் ரத்நாயக்க உபாதையடைந்திருக்கும் நிலையில் அவருடைய உடற்தகுதி தொடருக்கு முன்னர் கவனத்தில் கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்படடுள்ளது.

சரித் அசலங்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் அசித பெர்னாண்டோ ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

>>இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்<<

அதேநேரம் இளம் வீரர்களான நிசான் மதுஷ்க, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுசங்க மற்றும் எசான் மாலிங்க ஆகியோரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகள் எதிர்வரும் 2, 5 மற்றும் 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி பல்லேகலையிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிசான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, மிலான் ரத்நாயக்க, டில்ஷான் மதுசங்க, அசித பெர்னாண்டோ

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<