RCB அணியுடன் இணையும் சானியா மிர்ஷா!

Women's Premier league 2023

117

மகளிர் பிரீமியர் லீக்கில் (WPL) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் ஆலோசகராக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் பிரீமியர் லீக் மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.

நுவரெலியாவில் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை அணி!

இந்த தொடருக்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வீரர்கள் ஏலமும் நிறைவுபெற்றுள்ளது. இந்த நிலையில் ஒருசில அணிகள் தங்களுடைய பயிற்றுவிப்பு குழாம் தொடர்பிலான விபரங்களை வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஷாவை, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்களுடைய ஆலோசகராக நியமித்துள்ளது.

சர்வதேச டென்னிஸில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலப்பு இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் மேஜர் கிண்ணங்களை சானியா மிர்ஷா வென்றுள்ளார். இவர் அடுத்து நடைபெறவுள்ள டுபாய் ஓபன் டென்னிஸ் தொடரையடுத்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்துக்கொள்வார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேநேரம், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் பென் சவ்யர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உதவி பயிற்றுவிப்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மலோலன் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<