பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் பில் சிம்மன்ஸ்!

West Indies tour of Australia 2022

471

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து பில் சிம்மன்ஸ் விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பில் சிம்மன்ஸ் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி  ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையடுத்து தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸி. அணியினை விட நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் – தீக்ஷன

இரண்டு தடவைகள் T20 உலகக்கிண்ண சம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது. முதன்முறையாக இந்த அணி T20 உலகக்கிண்ணத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்து வெளியேறியிருக்கிறது.

குறித்த இந்த விடயம் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய விமர்சனத்தக்குள்ளாகியுள்ளது. முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வியை சந்தித்ததுடன், அயர்லாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.

மேற்கிந்திய தீவுகளின் இந்த வெளியேற்றம் தலைமை பயிற்றுவிப்பாளர் பில் சிம்மன்ஸை பாதித்துள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் தோல்வியின் பின்னர் தன்னுடைய கவலையை வெளியிட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே பில் சிம்மன்ஸ் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருடன் பதவியிலிருந்து வெளியேறுவதாக மே.தீவுகள் கிரிக்கெட் சபையிடம் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நவம்பர் 30ம் திகதி பேர்த்தில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி 8ம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<