ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகியுள்ள ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய இலங்கை அணியை பொருத்தவரை இரண்டு புதுமுக வேகப்பந்துவீச்சாளர்களை T20I போட்டிகளில் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்ஷான் மதுசங்க மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டிருந்தார்கள்.
புதிய வீரர்களுடன் களமிறங்கிய இலங்கை அணியானது ஆரம்பத்திலிருந்து மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப பந்துவீச்சாளர் பஷல்லாக் பரூகி முதல் ஓவரில் குசல் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கவை வெளியேற்றினார்.
தொடர்ந்து 2வது ஓவரில் நவீன் உல் ஹக், பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டினை கைப்பற்றினார். பெதும் நிஸ்ஸங்கவின் ஆட்டமிழப்பு சர்ச்சைகளை எழுப்பியிருந்த போதும், இலங்கை அணி 5 ஓட்டங்களுக்கு தங்களுடைய மூன்றாவது விக்கெட்டினை பறிகொடுத்தது.
இதனையடுத்து பானுக ராஜபக்ஷ மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்ப தொடங்கி ஓட்டங்களை குவித்தனர். இலங்கை அணி 49 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனுஷ்க குணதிலக்க ஆட்டமிழக்க, தொடர்ச்சியாக விக்கெட்டுகள் பறிகொடுக்கப்பட்டன.
ஒருகட்டத்தில் இலங்கை அணி 75 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், சாமிக்க கருணாரத்ன இறுதியாக 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எனவே இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் பஷல்லாக் பரூகி 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மொஹமட் நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி எந்தவித தடுமாற்றத்துக்கும் முகங்கொடுக்காமல் 10.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் ஹஷரதுல்லாஹ் ஷசாய் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
பவர்-பிளே ஓவர்களில் (முதல் ஆறு ஓவர்களில்) தங்களுடைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டிழப்பின்றி 83 ஓட்டங்களை குவித்தது. பவர்-பிளே ஓவர்களில் தங்களுடைய வெற்றியை இலகுவாக்கியதுடன், பின்னர் 2 விக்கெட்டுகளை இழந்தபோதும், இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.
ஆப்கானிஸ்தான் அணிசார்பாக குர்பாஸ் அதிகபட்சமாக 40 ஓட்டங்களையும், ஷசாய் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
ஆசியக்கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்வரும் முதலாம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. குறித்த இந்தப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதுடன், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றால் மாத்திரமே அடுத்தச்சுற்றுக்கு தகுதிபெறும்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Rahmanullah Gurbaz b Naveen ul Haq | 3 | 7 | 0 | 0 | 42.86 |
Kusal Mendis | lbw b Fazal Haq Farooqi | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Charith Asalanka | lbw b Fazal Haq Farooqi | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Danushka Gunathilaka | c Karim Janat b Mujeeb ur Rahman | 17 | 17 | 3 | 0 | 100.00 |
Bhanuka Rajapaksa | run out (Mohammad Nabi) | 38 | 29 | 5 | 1 | 131.03 |
Wanidu Hasaranga | c Mohammad Nabi b Mujeeb ur Rahman | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Dasun Shanaka | c Rahmanullah Gurbaz b Mohammad Nabi | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Chamika Karunaratne | b Fazal Haq Farooqi | 31 | 38 | 3 | 1 | 81.58 |
Maheesh Theekshana | run out (Rahmanullah Gurbaz) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Matheesha Pathirana | c Najibullah Zadran b Mohammad Nabi | 5 | 12 | 0 | 0 | 41.67 |
Dilshan Madushanka | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 6 (b 0 , lb 1 , nb 1, w 4, pen 0) |
Total | 105/10 (19.4 Overs, RR: 5.34) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Fazal Haq Farooqi | 3.4 | 1 | 11 | 3 | 3.24 | |
Naveen ul Haq | 3 | 0 | 23 | 1 | 7.67 | |
Mujeeb ur Rahman | 4 | 0 | 24 | 2 | 6.00 | |
Azmatullah Omarzai | 1 | 0 | 20 | 0 | 20.00 | |
Mohammad Nabi | 4 | 0 | 14 | 2 | 3.50 | |
Rashid Khan | 4 | 0 | 12 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hazratullah Zazai | not out | 37 | 28 | 5 | 1 | 132.14 |
Rahmanullah Gurbaz | b Wanidu Hasaranga | 40 | 18 | 3 | 4 | 222.22 |
Ibrahim Zadran | run out (Maheesh Theekshana) | 15 | 13 | 2 | 0 | 115.38 |
Najibullah Zadran | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Extras | 12 (b 0 , lb 5 , nb 0, w 7, pen 0) |
Total | 106/2 (10.1 Overs, RR: 10.43) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 1 | 0 | 10 | 0 | 10.00 | |
Maheesh Theekshana | 4 | 0 | 35 | 0 | 8.75 | |
Matheesha Pathirana | 1 | 0 | 16 | 0 | 16.00 | |
Wanidu Hasaranga | 3 | 0 | 19 | 1 | 6.33 | |
Chamika Karunaratne | 1 | 0 | 20 | 0 | 20.00 | |
Charith Asalanka | 0.1 | 0 | 1 | 0 | 10.00 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<