டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா கடைசி வாரத்தை எட்டியுள்ளது. மெய்வல்லுனர், பளுதூக்குதல், மல்யுத்தம், பெட்மிண்டன், கால்பந்து, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் இறுதிப் போட்டிகள் டோக்கியோ ஒலிம்பிக்கின் பத்தாவது நாளான நேற்று (02) நிறைவுக்கு வந்தன.
இதில் பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் புதிய உலக சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.
இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கின் பத்தாவது நாளில் இடம்பெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளின் தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
கியூபா வீரரின் உலக சாதனை

உலகின் அதிவேக வீரராக மகுடம் சூடிய இத்தாலியின் நீளம் பாயதல் வீரர்
நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 130 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் ஜோர்ஜியா நாட்டு வீரர் லகொபி கஜையாவை 5க்கு0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றே அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
ஜேஸ்மின் குயின் வரலாற்று சாதனை

போட்டித் தூரத்தை 12.37 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், முன்னதாக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியை 12.26 செக்கன்களில் நிறைவுசெய்து புதியு ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
அத்துடன், ஒலிம்பிக் மெய்வல்லுனர் போட்டிகள் வரலாற்றில் முதலாவது தங்கப் பதக்கத்தை பெட்ரோ ரிகோ நாடு வென்று புதிய சாதனை படைத்தது.
இதனிடையே குறித்த போட்டியில் அமெரிக்க வீராங்கனை கெண்ட்ரா ஹாரிஸ்சன் 12.52 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், ஜமைக்கா வீராங்கனை மேகன் டாப்பர் 12.55 போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்;
நீளம் பாய்தலில் கிரீஸ் வீரருக்கு தங்கம்

இதனிடையே, கியூபா நாட்டைச் சேர்ந்த ஜுயன் முகுயெல் (8.41 மீட்டர்) மற்றும் மெய்கல் மாஸோ (8.21 மீட்டர்) ஆகிய இருவரும் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
Photos: India vs Great Britain – Men’s Q4 | Tokyo 2020 Olympic Games
மெய்வல்லுனரில் அமெரிக்காவுக்கு முதல் தங்கம்

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் மெய்வல்லுனர் போட்டியில் அமெரிக்கா வென்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
இதனிடையே ஜேர்மனி வீராங்கனை கிறிஸ்டின் புடேன்ஸ் 66.86 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், கியூபா வீராங்கனை ஒய்மே பெரேஸ் 65.72 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை, பெண்களுக்கான பரிதிவட்டம் எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 6ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மெரோக்கோவுக்கு தங்கம்

குறித்த போட்டியை 8 நிமிடங்கள் 08.90 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு மெய்வல்லுனர் போட்டிகளில் மொரோக்கோவுக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த வீரராகவும் இடம்பிடித்தார்.
இறுதியாக 2004 எதென்ஸ் ஒலிம்பிக்கில் ஹிச்சம் எல் குஎரோஜ் ஆண்களுக்கான 1500 மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டலில் கென்யாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனிடையே, குறித்த போட்டியில் எத்தியோப்பியா மற்றும் கென்யா நாட்டு வீரர்கள் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
33 ஆண்டு ஒலிம்பிக் சாதனையை முறியடித்த எலைன் தோம்சன்
சிபான் ஹசனுக்கு முதல் தங்கம்

இன்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 14 நிமிடங்கள் 36.79 செக்கன்களில் நிறைவுசெய்து சிபான் ஹசன் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ஒலிம்பிக் நீண்டதூர ஓட்டப் போட்டிகள் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது நெதர்லாந்து மெய்வல்லுனர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.
அவருடன் போட்டியிட்ட கென்யா மற்றும் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
துப்பாக்கி சுடுதலில் சீனா உலக சாதனை

மேலும் 466 புள்ளிகளுடன் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் படைத்து அசத்தினார்.
இதனிடையே, ரஷ்யா வீரர் செர்கே காமென்ஸ்கி 464.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், சேர்பிய வீரர் மிலென்கோ செபிக் 448.2 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
Photos: Day 8 – 2020 Tokyo Olympic Games
கனடாவுக்கு வரலாற்று வெற்றி

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக கனடா அணி அமெரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்தது.
இறுதியாக நடைபெற்ற 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் கனடா அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பெண்களுக்கான கால்பந்து இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவீடன் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
பெட்மிண்டனில் டென்மார்க் வீரர் சாதனை

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக பெட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளவரும், நடப்பு ஒலிம்பிக் சம்பியனுமான சீன வீரர் சென் லோங்கை 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி விக்டர் தங்கப் பதக்கம் வென்றார்.
இறுதியாக நடைபெற்ற 2016 ரியோ ஒலிம்பிக்கில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் மெய்வல்லுனர் முதல் தங்கம் எத்தியோப்பியா வசமானது
அரசியல் அந்தஸ்து கோரும் பெலரூஸ் வீராங்கனை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குகொள்ள வந்த பெலரூஸைச் சேர்ந்த மெய்வல்லுனர் வீராங்கனை கிறிஸ்ட்ஸினா ரிமனோவ்ஸ்காயா ( Krystsina Timanovskaya) போலந்தில் தமக்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்.
பெலரூஸ் பயிற்றுவிப்பாளர்களை விமர்சித்ததாக தெரிவித்து, நேற்று தன்னை பலவந்தமாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெலரூஸுக்கு அனுப்ப முயற்சித்ததாக அவர் ஜப்பான் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

அவர் அளவிற்கு அதிகமான முறையில் உணர்ச்சிவசப்படும் நிலையில் இருந்தமையினால், பெலரூஸ் ஒலிம்பிக்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பெலரூஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஜப்பானில் உள்ள போலந்து தூதுவராலயத்தினுள் நுழையும் காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில் அவர் அரசியல் அந்தஸ்து கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொள்ள இருந்த நிலையில், குறுகிய அறிவித்தலில் 4X400 மீற்றர் அஞ்சல் போட்டிக்கு மாற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் சீன வீரர்கள்
வருகிறார் சிமோன்

இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள ‘பெலன்ஸ் பீம்‘ இறுதிப் போட்டியில் களமிறங்கப் போவதாக தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் இப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர், இம்முறை தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கின் பத்தாவது நாள் நிறைவுடையும் போது பதக்கப் பட்டியலில் சீனா மொத்தமாக 29 தங்கப் பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.
22 தங்கப் பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும், 17 தங்கப் பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…



















