பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்படும் ஹரிஸ் சொஹைல்

Pakistan tour of England 2021

196
ICC

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி சுப்பர் லீக்கின், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் ஹரிஸ் செஹைல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியின் பயிற்சியின் போது, இவருக்கு தசைப்படிப்பு உபாதை ஏற்பட்ட நிலையில், ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வீரர்களை விசாரிக்க ஐவரடங்கிய குழு நியமனம்

நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஹரிஸ் சொஹைலுக்கு, 3ம் வகுப்பு உபாதை உறுதிசெய்யப்பட்டதுடன், இதனால், அவர் நான்கு வாரங்களுக்கு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஹரிஸ் சொஹைல் மீண்டும் பாகிஸ்தான் திரும்பவுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட ஹரிஸ் சொஹைல், அணியின் வெற்றிக்கும், எனது இடத்தை அணியில் தக்கவைப்பதற்கும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். எனினும், இவ்வாறு அணியிலிருந்து வெளியேறுவது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனினும், லாஹூருக்கு திரும்பி முழுமையான சிகிச்சைகளையும், பயிற்சிகளையும் மேற்கொண்டு 2021-22 பருவகாலத்துக்காக தயாராகுவேன்என்றார்.

ஹரிஸ் சொஹைல் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இந்த பருவகாலத்துக்கான ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உடற்தகுதி காரணமாக தொடர்களை தவறவிட்ட இவர், மீண்டும் உடற்தகுதியை நிரூபித்து இந்த தொடருக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். குறிப்பாக 2019ம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஹரிஸ் சொஹைல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்றைய தினம் கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…