இங்கிலாந்தின் பிரபல்ய கிரிக்கெட் வர்ணனையாளர் மரணம்

109
Robin Jackman

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், பிரபல்யமிக்க கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஒருவருமான ரொபின் ஜேக்மேன் தன்னுடைய 75ஆவது அகவையில் நேற்று (25 மரணமடைந்திருக்கின்றார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொண்டைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ரொபின் ஜேக்மன், நீண்டகாலமாக இந்த நோயின் அவஸ்தைகளை எதிர்நோக்கி வந்திருந்தார். இந்த நோயின் தாக்கமே, இறுதியில் ஜேக்மனின் மரணத்திற்கும் காரணமாகியிருக்கின்றது. 

>> மிக்கி ஆத்தர் எம்முடன் இருப்பது அதிஷ்டம் – திமுத் கருணாரத்ன

ரொபின் ஜேக்மனின் இழப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐ.சி.சி., ஜேக்மனின் இழப்பு தமக்கு வருத்தம் தருவதாக குறிப்பிட்டிருப்பதோடு  அவரினது குடும்பத்தினருக்கும் தமது ஆறுதலை தெரிவித்திருக்கின்றது. 

இந்தியாவின் சிம்லாவினைப் பிறப்பிடமாகக் கொண்ட ரொபின் ஜேக்மன் 36 வயதில் சர்வதேச அறிமுகம் பெற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி மொத்தமாக 33 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றார். 

அதேநேரம், இங்கிலாந்தின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் சர்ரேய் கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடியிருக்கும் ஜேக்மன் 1,400 இற்கு மேலான விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<