பகிஸ்தானின் போராட்டம் வீணாக இங்கிலாந்துக்கு த்ரில் வெற்றி

307

பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி கடைசி ஓவர் வரை போராடி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சௌதம்ப்டனில் சனிக்கிழமை (11) நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் 50 பந்துகளில் அதிரடிச் சதம் விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 373 ஓட்டங்களை குவித்தது.

பாகிஸ்தான் இளையோர் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை நிராகரித்த யூனிஸ் கான்

19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான்…

மத்திய வரிசையில் வந்த பட்லர் 55 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக இரண்டாவது அதிவேக சதத்தை அவர் பதிவு செய்தார்.

எனினும், இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜேசன் ரோய் (87), ஜொன்னி பிஸ்டோ (51) மற்றும் அணித்தலைவர் இயன் மோர்கன் 48 பந்துகளில் பெற்ற 71 ஓட்டங்களும் இங்கிலாந்து அணி இமாலய ஓட்டங்களை எட்ட உதவியது.

உலகக் கிண்ண பாகிஸ்தான் அணியில் மொஹமட் அமீர் இடம்பெறாத நிலையில், தனது திறமையை வெளிப்படுத்த முடியாமல் சுகவீனமுற்ற நிலையில் ஹஸன் அலி 81 ஓட்டங்களையும் ஷாஹ் அப்ரிடி 80 ஓட்டங்களை இந்த போட்டியில் விட்டுக்கொடுத்தனர்.  

பாகிஸ்தான் ஆரம்ப வீரர் பகர் சமான் பெற்ற அபார சதம் மூலம் அந்த அணி நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டது. அவர் 106 பந்துகளில் 138 ஓட்டங்களை பெற்று அட்டமிழந்த பின்னரும் ஆசிப் அலி மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தொடர்ந்து சிறப்பாக ஆடினர்.

எனினும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான டேவிட் வில்லி மற்றும் லியாம் பிளங்கட்டின் ஆகியோரது அழுத்தத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் அணியின் ஓட்ட வேகம் குறைய விக்கெட்டுகளும் சரிந்தன.  

ஸ்கொட்லாந்து அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும்…

இதனால், கடைசி ஓவருக்கு 19 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் 6 ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 361 ஓட்டங்களையே பெற்றது. எனவே, துடுப்பாட்டத்தில் அவ்வணியினர் ஆரம்பம் முதல் கொடுத்த போராட்டம் இறுதியில் தோல்வியில் முடிந்தது.

இரு அணிகளுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. எனவே, இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் வரும் செவ்வாய்க்கிழமை (14) நடைபெறவுள்ளது.   

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 373/3 (50 ஓவர்கள்) – ஜோஸ் பட்லர் 110*, ஜேசன் ரோய் 87, இயன் மோர்கன் 71*, ஜொன்னி பெஸ்டோ 51

பாகிஸ்தான் – 361/7 (50) – பகர் சமான் 138, பாபர் அஸாம் 51, ஆசிப் அலி 51, டேவிட் வில்லி 2/57, லியாம் பிளங்கட் 2/64

முடிவு – இங்கிலாந்து 12 ஓட்டங்களால் வெற்றி