சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவை இடையே நடைபெற்று வரும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை A அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றினை தடுக்க முயற்சித்து வருவதுடன் குறித்த முயற்சியில் வெற்றி பெறும் நிலையினையும் அடைந்திருக்கின்றது.
முதல் இன்னிங்ஸில் இமாலய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற அயர்லாந்து A அணி
சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி, ஆகியவைக்கு… நியூசிலாந்து …
ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாடியிருந்த அயர்லாந்து A அணி, தமது முதல் இன்னிங்ஸை இமாலய மொத்த ஓட்டங்களான 508 ஓட்டங்களுடன் முடித்திருந்தது.
இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை A அணியின் வீரர்கள் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (14) நிறைவுக்கு வரும் போது 99 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்துடன் காணப்பட்டிருந்தனர். நேற்றைய நாளில் இலங்கை A அணிக்கு நம்பிக்கை தரும் வீரராக காணப்பட்ட அஞ்சலோ பெரேரா அரைச்சதம் ஒன்றுடன் (50) ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.
இன்று (15) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் அயர்லாந்து A அணியினை விட 409 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை A அணிக்கு, அஞ்சலோ பெரேரா சதம் ஒன்றினை பெற்றுத்தர, மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சம்மு அஷானும் அரைச்சதம் குவித்து பெறுமதி சேர்த்திருந்தார்.
இந்த இரண்டு வீரர்கள் தவிர ஏனைய இலங்கை A அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஜொலிக்காத நிலையில், இலங்கை A அணி 73.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 303 ஓட்டங்களை மட்டுமே தமது முதல் இன்னிங்ஸில் பெற்றது.
இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் சதம் கடந்த அஞ்சலோ பெரேரா 17 பெளண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களையும், அரைச்சதம் பெற்ற சம்மு அஷான் 6 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 72 ஓட்டங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்வரிசை வீரர்களின் அரைச்சதங்களோடு வலுப்பெற்றுள்ள அயர்லாந்து A அணி
சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி, ஆகியவைக்கு இடையிலான….
மறுமுனையில், அயர்லாந்து A அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரரான ஜேம்ஸ் கெமரூன் டோவ் 99 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். கெமரூன் டோவ் இதற்கு முன்னர், இலங்கை A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் 7 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, இலங்கை A அணி தமது முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்ட எண்ணிக்கை போதாது என்பதால் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அயர்லாந்து A அணியினை விட 205 ஓட்டங்கள் பின்தங்கியவாறு பலோவ் ஒன் முறையில் மீண்டும் ஆரம்பம் செய்திருந்தது.
போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தவிர்க்க அயர்லாந்து A அணியினை விட பின்தங்கியுள்ள ஓட்டங்களை பெற வேண்டும் என்பதால் அவதானத்துடனேயே ஆடிய இலங்கை A அணி, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 180 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து ஒரு நல்ல நிலையில் காணப்படுகின்றது.
>>BPL தொடரில் தனது முதல் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த திசர பெரேரா
இந்த இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் அடிப்படையில் தற்போது வெறும் 25 ஓட்டங்களினாலேயே அயர்லாந்து A அணியினை விட பின்தங்கியிருக்கும் இலங்கை A அணிக்கு, களத்தில் பெதும் நிஸ்ஸங்க 92 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்று நம்பிக்கை தருகின்றனர்.
இலங்கை A அணியின் இரண்டாம் இன்னிங்ஸின் போது, அயர்லாந்து A அணியின் பந்துவீச்சிற்காக ஜொனதன் கார்த் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<