கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆதில் ரஷீட்டின் சுழலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 240 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.
பெயார்ஸ்டோவின் சதத்தின் பின் இங்கிலாந்தை கட்டுப்படுத்திய சந்தகன்
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட்
முதலாவது நாள் ஆட்டநேர நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றிருந்த இங்கிலாந்து அணி, இன்று மேலதிகமாக 24 ஓட்டங்களை பெற்ற நிலையில் எஞ்சியிருந்த 3 விக்கெட்டுகளையும் இழந்தது. இன்றைய தினம் அதிகபட்சமாக மொயீன் அலி 33 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், ஆதில் ரஷீட் 21 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இவர்களை தவிர இங்கிலாந்து அணி சார்பில் ஜொனி பெயார்ஸ்டோவ் 110 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் நேற்றைய தினம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த லக்ஷான் சந்தகன், இன்று ஸ்டுவர்ட் புரோட்டின் விக்கெட்டினை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய இரண்டாவது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு அடுத்தபடியாக இன்றைய தினம் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய டில்ருவான் பெரேரா மொத்தமாக 3 விக்கெட்டுகளையும், புஷ்பகுமார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு, தனுஷ்க குணதிலக மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்காக 31 ஓட்டங்ளை பெற்றுக்கொடுத்தனர். எனினும், துரதிஷ்டவசமாக தனுஷ்க குணதிலக 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Photos: Sri Lanka Vs. England | 3rd Test | Day 2
ThePapare.com | Viraj Kothalawala | 24/11/2018 | Editing and re-using images without permission of ThePapare.com will be considered
இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து இணைந்த திமுத் கருணாரத்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பினர். இதன்படி இலங்கை அணி இன்றைய மதிய போசண இடைவேளையின் போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 74 ஓட்டங்களை பெற்றிருந்தது.
தொடர்ந்து மதிய போசண இடைவேளையின் பின்னரும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் தங்களுடைய அரைச்சதங்களை கடந்தனர். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 142 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டமானது தொடரின் அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற, அதிகூடிய இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாகவும் அமைந்தது.
குறித்த 142 என்ற இணைப்பாட்டத்தின் பின்னர், தனன்ஜய டி சில்வா தேநீர் இடைவேளைக்கு 10 நிமிடங்கள் மாத்திரம் இருக்க 73 ஓட்டங்களுடன் ஆதில் ரஷீட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திமுத் கருணாரத்ன தொடர்ந்தும் துடுப்பெடுத்தாட, தேநீர் இடைவேளையின் போது இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், தேநீர் இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது. 83 ஓட்டங்களை பெற்றிருந்த திமுத் கருணாரத்ன ஆதில் ரஷீட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகளை சுழலால் சுருட்டிய பங்களாதேஷ்
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ்
குசல் மெண்டிஸ் மாத்திரம் 27 ஓட்டங்களை பெற, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதில் மலிந்த புஷ்பகுமார 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் பலமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, இறுதியில் வெறும் 240 ஓட்டங்களுக்கு சுருண்டு ஏமாற்றமளித்தது. தேநீர் இடைவேளைக்கு பின்னர் இலங்கை அணி வெறும் 57 ஓட்டங்களுக்கு தங்களுடைய 8 விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது. பந்துவீச்சில் ஆதில் ரஷீட் 5 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக கைப்பற்றினர். பின்னர் இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளதுடன், இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட்டிழப்பின்றி 3 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஸ்கோர் விபரம்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க