இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையில் இன்று (24) நடைபெற்ற நான்காவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றிபெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
இந்திய மகளிர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜெனிமாஹ் ரொட்ரிகஸ்
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக…
கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில் நடைபெற்ற இன்றைய நான்காவது T20 போட்டி சீரற்ற காலைநிலை காரணமாக தாமதமாக ஆரம்பமாகியதுடன், அணிக்கு 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணியின் தலைவி ஹர்மன்ப்ரீட் சிங் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.
ஏற்கனவே, தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த இலங்கை அணி, தொடர் தோல்வியை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் வெற்றியொன்றை எதிர்பார்த்து இன்றைய போட்டியில் களமிறங்கியது.
போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை மகளிர் அணி, விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்கமால் ஓட்டங்களை சேர்க்கத் தொடங்கியது. அணித் தலைவி சமரி அதபத்து மற்றும் சஷிகலா சிறிவர்தன ஆகியோரின் உதவியுடன் 17 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சஷிகலா சிறிவர்தன 32 பந்துகளுக்கு 40 ஓட்டங்களையும், சமரி அதபத்து 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். இந்தியாவின் பந்து வீச்சில் அனுஜா படில் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சவாலான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, ஜெமிமாஹ் ரொட்ரிகஸ் மற்றும் அனுஜா படில் ஆகியோரின் அதிரடி அரைச்சதங்களின் உதவியுடன் 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
தலைமைப் பதவியை இழந்த மெதிவ்ஸின் அதிரடி அறிவிப்பு
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில்…
ஆரம்பத்தில் இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனைகளான மிதாலி ராஜ் மற்றும் ஸ்ம்ரிட் மந்தனா ஆகியோரின் விக்கெட்டுகளை ஒசாதி ரணசிங்க தனது முதல் ஓவரில் வீழ்த்திய போதும், ரொட்ரிகஸ் மற்றும் அனுஜா படில் ஆகியோர் இந்திய மகளிர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்திய மகளிர் அணிசார்பில் ஜெமிமாஹ் ரொட்ரிகஸ் ஆட்டமிழக்காமல் 32 பந்துகளுக்கு 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அனுஜா படில் 42 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை விளாசியிருந்தார். இலங்கை அணியின் பந்து வீச்சில் தனியாளாக பிரகாசித்த ஒசாதி ரணசிங்க 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியதுடன், T20 தொடரில் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டி சுருக்கம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















