இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்

1130

யாழ் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடர் இரண்டாவது முறையாக இவ்வருடமும் மிகவும் கோலாகலமாக இடம்பெறவிருக்கின்றது.

ரொஹான் மற்றும் சங்கர் ஆகியோர் 1989ஆம் ஆண்டு கிறாஸ்ஹொப்பேர்ஸ் அணிக்காக முரசொலி கிரிக்கெட் கிண்ணத்தினைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்காளிகளாவர். முரசொலி கிரிக்கெட் தொடர் 6 பேர் விளையாடும் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அமைந்திருந்தது. அதன் காரணமாகவே ஜி.பி.எல் போட்டித் தொடரும் அவ்வாறு நடாத்தப்படுகின்றது.

திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கப்பட்டதா? உண்மைச் சம்பவம் இதுதான்

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணியினர்..

இத்தொடரில் பங்குபற்றவுள்ள வீரர்களுக்கான ஏலம் மற்றும் போட்டித் தொடரின் ஆரம்ப விழா என்பன அண்மையில் யாழ்ப்பாணம் ரில்கோ ஹொட்டலில் இடம்பெற்றிருந்தது.

இம்முறை ஜி.பி.எல் போட்டித் தொடரில் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ், ரில்கோ றைடர்ஸ், சிவன் வொரியர்ஸ், ரொப் செலஞ்சர்ஸ், டீப் டைவேர்ஸ் மற்றும் நோர்த் டிரகன்ஸ் ஆகிய அணிகள் களங்காணவுள்ளன. குறித்த ஆரம்ப மற்றும் ஏல நிகழ்வில் ஒவ்வொரு அணியின் சார்பிலும் அணி உரிமையாளர், முகாமையாளர், பயிற்றுவிப்பாளர் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

ஏலத்தில் 22 கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 90 வீரர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

அணி உரிமையாளர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்கள் விரும்பும் வீரர் ஒருவரை அவ்வீரரும் விரும்பும் பட்சத்தில் ஏலம் இல்லாது தமது அணியுடன் இனைத்துக்கொள்ள முடியும். இவ்வீரர்களுக்கான பெறுமதி ரூபா 5,000 ஆகும்.

இதனடிப்படையில்,   

கே.சி.சி.சி. அணியின் ஜெயரூபன் சயன்ல் வேல்ட் கிங்ஸ் அணியுடன் இணைந்தார்.

மானிப்பாய் பரிஷ்  அணியின் குகபிரசாநந் ரில்கோ றைடேர்ஸ் அணியுடன் இணைந்தார்.

சென்றல் அணியின் ரஜீவ்குமார் சிவன் வொரியர்ஸ் அணியுடன் இணைந்தார்.

ஜோனியன்ஸ் அணியின் அன்புஜன் ரொப் செலஞ்சர்ஸ் அணியுடன் இணைந்தார்.

அரியாலை அணியின் கவிந்தன் டீப் டைவேர்ஸ் அணியுடன் இணைந்தார்.

ஜோனியன்ஸ் அணியின் பிருந்தாபன் நோர்த் டிராகன்ஸ்  அணியுடன் இணைந்தார்.

வீரர்கள் ஏலம்

ஜி.பி.எல் போட்டித் தொடரின் தீர்ப்பாளர் நிசாந்தன், பதிவாளர் கோபிகிருஷ்னா ஆகியோர் இணைந்து ஏலத்தினை நடத்தினார். ஏலத்தில் கீழுள்ள நிபந்தனைகள் விடுக்கப்பட்டிருந்தன.

  1. கிறாஸ்ஹொப்பேர்ஸ் கழகத்தின் 06 வீரர்களுள் ஒவ்வொருவரினை ஒவ்வொரு அணியும் அவசியம் உள்வாங்க வேண்டும்.
  2. ஏனைய கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு வீரர்களுள் மூவரினை மட்டுமே ஒரு அணி உள்வாங்க முடியும். இருப்பினும் இருவரினை மட்டுமே ஒரு போட்டிக்காக களமிறக்க முடியும்.

3. ஓர் அணி ஏற்கனவே தேர்வு செய்த வீரரைத்தவிர 07 பேரை ஏலம் மூலம் பெற்று 08 பேர் கொண்ட குழாமினை அமைக்க முடியும்.

*பற்றீசியன்ஸ் அணியின் றிசாந் ரியூடர் மருத்துவ காரணங்களால் தொடரில் பங்கெடுக்க முடியாது என்பதால் அவர் ஏலத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.

சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்
உரிமையாளர் – சயன்ஸ் வேல்ட்
நிறம் – பச்சை
முகாமையாளர் – நேசரூபன்
பயிற்றுவிப்பாளர் – டானியல் மதியழகன்
ஜெயரூபன்(கே.சி.சி.சி) – 5,000
மதுசன்(கிறாஸ்ஹொப்பேர்ஸ்) – 10,000
சுஜந்தன்(யூனியன்) – 24,000
செல்ரன்(சென்றலைற்ஸ்) – 7,000
நிறோசன்(ஓல்ட் கோல்ட்ஸ்) – 26,000
சுந்தர்ராஜன்(சிறி காமாட்சி) 2,000
சுஜெந்தன்(டிறிபேர்க்) – 2,000
சுஜேன்(சிறி காமாட்சி) – 2,000

ரில்கோ றைடர்ஸ்
உரிமையாளர் – ரில்கோ சிற்றி ஹொட்டல்
நிறம் – செம்மஞ்சள்
முகாமையாளர் – சுதாகரன்
பயிற்றுவிப்பாளர் – சுரேஷ்மோகன்
குகபிரசாத்(மானிப்பாய் பரிஷ்) – 5,000
சாரங்கன்(கிறாஸ்ஹொப்பேர்ஸ்) – 2,000
மதுசன்(ஜொலி ஸ்ரார்ஸ்) – 10,000
பிரதீசன்(கே.சி.சி.சி) – 2,000
மதுசன்(ஓல்ட் கோல்ட்ஸ்) – 2,000
மோகன்ராஜ்(சிறி காமாட்சி) – 2,000
கல்கோகன்(யாழ். பல்கலைக்கழகம்) – 2,000
கிஷோக்குமரன்(மானிப்பாய் பரிஷ்) – 2,000

மன்னார் மாவட்ட அணியை பெனால்டியில் வீழ்த்திய யாழ் மாவட்ட அணி வடக்கின் சம்பியனாகியது

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் 8 ஆவது விளையாட்டு நிகழ்வுகளின்..

சிவன் வோரியர்ஸ்
உரிமையாளர் – சிவன் அறக்கட்டளை
நிறம் – மஞ்சள்
முகாமையாளர் – சதீஸ்
பயிற்றுவிப்பாளர் – வேதாவர்னன்
ரஜீவ்குமார்(சென்றல்) – 5,000
ரசிகரன்(கிறாஸ்ஹொப்பேர்ஸ்) – 2,000
ஜீவ பிரஷாத்(ஹாட்லி) – 2,000
சுதர்சன்(சென்றல்) – 2,000
சத்யன்(ஹாட்லி) – 2,000
பிரதீப்(ஹாட்லி) – 2,000
தயாளன்(யூனியன்) – 10,500
நோபேர்ட்(பற்றீசியன்ஸ்) – 2,000

ரொப் செலஞ்சர்ஸ்
உரிமையாளர் – தின்னை ஹொட்டல்ஸ்
நிறம் – சிவப்பு
முகாமையாளர் – ரூபேந்திரன்
பயிற்றுவிப்பாளர் – சுகராஜ்
அன்புஜன்(ஜொனியன்ஸ்) – 5,000
அஜித்(கிறாஸ்ஹொப்பேர்ஸ்) – 18,000
பபிதரன்(கே.சி.சி.சி) – 11,000
டார்வின்(சென்றலைட்ஸ்) – 37,000
கஜானந்(ஜொலி ஸ்ரார்ஸ்) – 12,000
கஜீபன்(ஜொனியன்ஸ்) – 2,000
ஜனுதாஸ்(கே.சி.சி.சி) – 14,000
பகீரதன்(ஜொலி ஸ்ரார்ஸ்) – 2,000

டீப் டைவேர்ஸ்
உரிமையாளர் – லண்டன் நண்பர்கள்
நிறம் – நீலம்
முகாமையாளர் – குகதாஸ்
பயிற்றுவிப்பாளர் – பத்மமுரளி
கவிந்தன்(அரியாலை) – 5,000
சரன்ராஜ்(கிறாஸ்ஹொப்பேர்ஸ்) – 10,000
பிரியலக்சன்(ஓல்ட் கோல்ட்ஸ்) – 25,500
வதுசன்(சென்றலைட்ஸ்) – 33,000
ஜெம்ஸ் ஜான்சன்(சென்றலைட்ஸ்) – 5,500
சுரேந்திரன்(திருநெல்வேலி) – 16,500
கோபிராம்(அரியாலை)
லினோர்த்தன் (அரியாலை) – 16,000

நோர்த் டிரகன்ஸ்
உரிமையாளர் – ரி.எம்.கே சகோதரர்கள்
நிறம் – ஊதா
முகாமையாளர் – விஜியாளன்
பயிற்றுவிப்பாளர் – லவேந்திரா
பிருந்தாபன்(ஜொனியன்ஸ்) – 5,000
டிலோசன்(கிறாஸ்ஹொப்பேர்ஸ்) – 7,000
சன்சஜன்(ஜொனியன்ஸ்) – 30,000
வினோத்(மானிப்பாய் பரிஷ்) – 61,000
ஜனன்ந்தன்(யாழ். பல்கலைக்கழகம்) – 21,000
அருன்ராஜ்(வை.எம்.எச்.ஏ) – 2,000
சிறிகஜன்(ஓல்ட் கோல்ட்ஸ்) – 25,000
ரதீசன்(பற்றீசியன்ஸ்) – 15,000

நடவடிக்கை தலைமை அதிகாரி 
கோபிகிருஷ்ணா

போட்டி நடுவர்கள்
சிவராஜா
கிருபாகரன்
செல்வராஜா

கடந்த வருடம் தொடர் முழுவதும் அசத்தி தொடர் நாயகன் விருதினையும் தன்வசப்படுத்தியிருந்த வினோத்தினை தம்வசப்படுத்துவதற்கு ரொப் செலஞ்சர்ஸ், நோர்த் டிரகன்ஸ், டீப் டைவேர்ஸ் அணிகளிடையே பலத்த போட்டி நிலவியது. இறுதியில் நோர்த் டிராகன்ஸ் அணி 61,000 ரூபா ஏலத்தொகைக்கு வினோத்தினை தம்வசப்படுத்தியது.

மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்

20 வயதின் கீழ் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி தெல்லிப்பளை மகாஜன கல்லூரியின் முன்னாள்

கடந்த வருடம் அதிகூடிய ஏலத்தொகையாக 12,000 ரூபாவே இருந்தது. இம்முறை இது 5 மடங்கால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏலத்திற்காக அணிகள் செலவிட்டுள்ள தொகை

நோர்த் டிராகன் – 161,000
டீப் டைவேர்ஸ் – 104,500
ரொப் செலஞ்சர்ஸ் – 96,000
சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் – 73,000
ரில்கோ றைடர்ஸ் – 26,000
சிவன் வொரியர்ஸ் – 25,000

போட்டிகள்

மொத்தமாக 09 போட்டிகளைக் கொண்டதாக இந்த சுற்றுத் தொடர் இடம்பெறும்.

குழு “A” குழு “B”
ரில்கோ றைடர்ஸ் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்
நோர்த் டிராகன் ரொப் செலஞ்சர்ஸ்
டீப் டைவேர்ஸ் சிவன் வொரியர்ஸ்

*முதலாவது சுற்றில் ஒவ்வோரு அணியும் தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதும். புள்ளியடிப்படையில் குழுவில் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும்.

அரையிறுதி

A1 எதிர் B2
B1 எதிர் A2

இறுதிப் போட்டி

அனைத்து போட்டிகளும் இம்மாதம் 26ஆம் திகதி  திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும்.

வீரர்கள் ஏலத்தின் மூலம் பெறப்பட்ட மொத்த தொகையான 485,500 ரூபாவில் 75% கடந்த வருடம் போன்று இவ்வருடமும் பொதுச்சேவைக்காக செலவிடப்படவுள்ளது. ஜி.பி.எல் கிரிக்கெட்டை மட்டுமன்றி சமூகத்தையும் வளர்ப்பதற்கு துணை நிற்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் தொடர்பான சகல விடயங்களையும் அறிந்துகொள்ள Thepapare.com உடன் இணைந்திருங்கள்.