சகோதரர்கள் சமரில் தர்ஸ்டன் கல்லூரி ஆதிக்கம்

115

இசிபத்தன கல்லூரிக்கு எதிரான 56வது சகோதரர்களின் பெரும் சமர் போட்டியின் முதல் நாளில் தர்ஸ்டன் கல்லூரி வலுவான நிலையை எட்டியுள்ளது.

கொழும்பு, SSC மைதானத்தில் இன்று (22) ஆரம்பமான போட்டியில் பந்துவீச்சில் சோபித்த தர்ஸ்டன் கல்லூரி துடுப்பாட்டத்தில் விக்கெட்டுகளை காத்துக் கொண்டு ஆடி வருகிறது.

Photos: Thurstan College vs Isipathana College | 56th Battle of the Brothers – Day 1

ThePapare.com |Viraj Kothalawala | 22/02/2019 Editing and re-using…

இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இசிபத்தன அணி ஆரம்பம் தொட்டு தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.

குறிப்பாக பவந்த ஜயசிங்க மற்றும் சதரு டயஸ் தமது பந்து வீச்சு மூலம் இசிபத்தன கல்லூரி துடுப்பாட்ட வீரர்களை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ஜயசிங்க 5 விக்கெட்டுளை வீழ்த்தியதோடு, டயஸ் 4 விக்கெட்டுகளை பதம் பார்த்தார்.

இதன் மூலம் இசிபத்தன கல்லூரி 57.1 ஓவர்களில் 169 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தவிந்து திக்வெல்ல அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி சிறப்பாக செயற்பட்டு முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 154 ஓட்டங்களை பெற்றுள்ளது. அன்ஜு கருணாரத்ன 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

இதன்படி இசிபத்தன கல்லூரி முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது தொடர்ந்து 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, 15 ஓட்டங்களால் மாத்திரமே பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், போட்டியின் இரண்டாவதும், இறுதியுமான நாள் ஆட்டம் நாளை (22)  நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க