ஈட்டி எறிதலில் பளை மத்திய கல்லூரியின் எழில்ப்பிரியனுக்கு தங்கம்

Sir John Tarbat Junior Athletics Championship 2022

350

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று (28) ஆரம்பமாகிய சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் வடக்கு மாகாணத்துக்கான முதல் பதக்கத்தை கிளிநொச்சி – பளை மத்திய கல்லூரி மாணவன் ராஜமனோகரன் எழில்ப்பிரியன் பெற்றுக்கொடுத்தார்.

15 வயதின் கீழ் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட எழில்ப்பிரயன், 50.76 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 51ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (28) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்லட்ஸ் நிறுவனத்தின் அனுசாணையுடன் நடைபெறுகின்ற இம்முறை போட்டிகளில் நாடாளவிய ரீதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

12, 13, 14 மற்றும் 15 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் இரண்டு புதிய போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

12 வயதின் கீழ் ஆண்களுக்கான 80 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.1 செக்கன்களில் நிறைவு செய்த கண்டி தர்மராஜ கல்லூரியைச் சேர்ந்த டி. ஹெட்டியாரச்சி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

அதேபோல, 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் வத்தளை லைசியம் சர்வதேச கல்லூரி மாணவி தரூஷ மெண்டிஸ் 1.93 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

போட்டிகளின் இரண்டாவது நாளான இன்றைய தினம் (29) 32 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<