உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

39

இத்தாலியில் நடைபெற்று வருகின்ற உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான இலங்கை மெய்வல்லுனர் குழாத்தில் நான்கு தமிழ் பேசும் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

30ஆவது உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள 25 பேர் கொண்ட இலங்கை குழாம் கடந்த வாரம் இத்தாலி நோக்கி பயணமாகியது

உலகம் பூராகவும் உள்ள பல்கலைக்கழங்களைச் சேர்ந்த சுமார் 1000இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்ற 30ஆவது கோடைக்கால யுனிவெர்சியாட் மெய்வல்லுனர் போட்டிகள் இத்தாலியின் நெப்போலியில் உள்ள சென் போலோ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது

Photo Album  : Sri Lanka Athletics team for World University Games 2019

இம்முறை போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 25 பேர் கொண்ட குழாமொன்று பங்குபற்றவுள்ளது. இதில் ஸ்ரீ ஜயவர்தனபுர, சப்ரகமுவ, ருஹுனு, கொழும்பு, களனி உள்ளிட்ட பல்கலைக்கழங்களைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழாத்தில் அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற ரொஷான் தம்மிக்க, ஒமாயா உதயங்கி மற்றும் ஹசினி பிரபோதா உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்

அத்துடன், கே. தயானந்தன், வெனிலன் மார்க், சமீஹா றிஷாட் மற்றும் ஆர்.எம் நிப்ராஸ் உள்ளிட்ட நான்கு தமிழ் பேசுகின்ற வீரர்களும் இம்முறை உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.  

இதில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்றுவருகின்ற மூதூரைச் சேர்ந்த ஆர்.எம் நிப்ராஸ் முதல்தடவையாக சர்வதேச மட்டப் போட்டியான்றில் பங்குபற்றவுள்ளார்

கல்வியைப் போல மெய்வல்லுனர் விளையாட்டிலும் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நிப்ராஸ், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா, தேசிய இளைஞர் விளையாட்டு விழா மற்றும், தேசிய விளையாட்டு விழா, இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் 1500 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவுசெய்த வீரராவார்

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கைக்கு மூன்றாவது இடம்

ஜப்பான் கஷிமா விளையாட்டு மையத்தில் நடைபெற்று ……..

இந்த நிலையில், கடந்த வருடம் முதல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட அவர், கடந்த வருடம் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 1500 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்

இதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 110 மீறறர் சட்டவேலி ஓட்டத்தில் இரண்டாவது இடத்தையும், 100 மீற்றரில் 2ஆவது இடத்தையும், 4x100 அஞ்சலோட்டத்தில் 3ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான கே. தயானந்தன், இம்முறை உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவில் இலங்கை 4x100 அஞ்லோட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளார்

இதுஇவ்வாறிருக்க, பாடசாலை மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற களுத்துறையச் சேர்ந்த சமீஹா றிஷாட், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியிலும், மன்னாரைச் சேர்ந்த எஸ். வெனிலான் மார்க் ஆண்களுக்கான முப்பாய்ச்சலிலும் களமிறங்கவுள்ளனர்

Road to Barcelona நிகழ்வுக்கு இம்முறையும் இலங்கையில் இருந்து எட்டுப் பேருக்கு வாய்ப்பு

உலகின் பிரபல கால்பந்து கழகமான ….

இதேநேரம், இலங்கை அணியின் பயிற்சியாளர்களாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமன்தா லலானி, .எல் ரொஹான் உள்ளிட்டோர் பணியாற்றவுள்ளதுடன், அணியின் முகாமையாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் எஸ்.எம்.பி.பி சமரகோன் செயற்படவுள்ளார்

இலங்கை அணி விபரம் 

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 

கவிந்து லக்ஷான் (400 மீற்றர்/ 4x400), யொஹான் காவிந்த (4x400), கே. தயானந்தன் (4x100), எஸ். வெனிலான் மார்க் (முப்பாய்ச்சல்), டி.சி பதிராஜ (நீளம் பாய்தல்), கவிந்து அரலிய (4x100), டில்ஹானி பெர்னாண்டோ (800 மீற்றர்), கே. அபேரத்ன (400 மீற்றர் தடைதாண்டல்), ஓமாயா உதயங்கனி (100/200/400/4x400 மீற்றர்), ரொஷான் தம்மிக்க (100 மீற்றர் சட்டவேலி ஓட்டம்)

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

எல். குமார (400 மீற்றர்/4x400), மலித் உதயகுமார (நீளம் பாய்தல்/ 4x100), அக் மாரலன்த (4x100),  . ஸ்ரீமாலி (4x100), பி.எஸ் துலக்ஷா (4x100), எஸ்.வி விக்ரமரத்ன (4x100), ஹசினி பிரேபதா (முப்பாய்ச்சல்)

ருஹுனு பல்கலைக்கழகம் 

பசிந்து பியதிலக்க (4x100), கசுன் டயஸ் (4x100), . ஜயமினி (ஈட்டி எறிதல்)

களனி பல்கலைக்கழகம்

சமீஹா றிஷாட் (குண்டு எறிதல்)

கொழும்பு பல்கலைக்கழகம்

ஆர். நிப்ராஸ் (1500 மீற்றர்), சேத்தக்க விஜேகுணசிங்க (ஈட்டி எறிதல்), கிஹான் ரனவீர (100/4x100) 

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<