பிரியாவிடை பெற்றார் நுவன் குலசேகர

2286

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்காக பல உண்ணதமான சேவைகளை ஆற்றி அணியின் வெற்றிக்காக உழைத்த நுவான் குலசேகரவுக்கு மரியாதை செய்யும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (31)  அவருக்கான பிரியாவிடை நிகழ்வொன்றை நடாத்தியது.  

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வைத்து ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் இறுதியாக விளையாடிய குலசேகரவுக்கு மீண்டும் தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை

பங்களாதேஷை வைட்வொஷ் முறையில் வீழ்த்தியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிராக கொழும்பு ……

இவ்வாறு கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக தற்போது 37 வயதாகும் நுவன் குலசேகர அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த புதன்கிழமை (24) அறிவித்திருந்தார்

கடந்த 1982ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதி நிட்டம்புவயில் பிறந்தவர் நுவன் குலசேகர. சிறு வயதிலிருந்து பாடசாலை காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட குலசேகர தான் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்று கனவு கண்டார்.

பாடசாலை காலங்களில் இருந்து தொடர்ச்சியாக பந்துவீச்சில் பல சாதனைகளை நிகழ்த்திவந்த நிலையில் குலசேகர 2001ஆம் ஆண்டு முதற்தடவையாக முதல்தர போட்டியில் அறிமுகமானார். பின்னர் 2002ஆம் ஆண்டு தர போட்டியிலும் அறிமுகமானார்.  

முதல்தர, கழகமட்ட போட்டிகளில் அதித திறமைகளை வெளிக்காட்டிவந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையானது நுவன் குலசேகர எனும் ஒரு வேகப் பந்துவீச்சாளரை 2003ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேச போட்டி மூலமாக சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு கொண்டுவந்தது

Photo Album: Sri Lanka vs Bangladesh | 3rd ODI

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை கொண்டுவந்ததன் மூலம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் டெஸ்ட் அறிமுகமத்தையும் அவர் பெற்றார். இவ்வாறு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என கலக்கிவந்த குலசேகரவுக்கு 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடன் டி20 சர்வதேச அறிமுகமும் கிடைத்தது

இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணி மூலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு வேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்துவந்த குலசேகரவுக்கு 2009ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகம் மற்றுமொரு பெருமையை சேர்த்துக் கொடுத்தது. 2009 மார்ச் 11ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்ட ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நுவன் குலசேகர முதலிடம் பிடித்து தனது பெயரை உலகறியச் செய்தார்

மார்ச் 11 இலிருந்து 2009 செப்டம்பர் 26 வரையான அரை வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக  ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அவர் முதலிடத்தில் நீடித்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 10ஆவது .சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டி வரை செல்வதற்கு நுவன் குலசேகர பந்துவீச்சாளர்கள் வரிசையில் மிக முக்கிய இடம் வகித்தார்.

அத்துடன் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி பங்களாதேஷில் வைத்து .சி.சி டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு நுவன் குலசேகர முக்கிய பங்கு வகித்திருந்தார். இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 21 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகள், 184 ஒருநாள் போட்டிகளில் 199 விக்கெட்டுகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் 66 விக்கெட்டுக்கள் என மொத்தமாக 313 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கு ஆறு தொடர்கள்

ஆரம்பத்தில் கிரிக்கெட் எனும் விளையாட்டு ……

ஒரு பந்துவீச்சாளராக மாத்திரம் நின்று விடாது அணிக்கு தேவையான நேரத்தில் 8ஆம் அல்லது 9ஆம் இலக்கத்தில் களமிறங்கி துடுப்பாட்டத்திலும் பிரகாசித்துள்ளார் குலசேகர. ஒருநாள் சர்வதேச அரங்கில் 1,327 ஓட்டங்களுடன் மொத்த சர்வதேச அரங்கில் 1,933 ஓட்டங்களை குவித்துள்ளார்.  

இவ்வாறு 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றுள்ள நுவன் குலசேகர இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆற்றிய மகத்தான சேவைகளை பாராட்டி நேற்று (31) நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையானது பாரிய கௌரவிப்பு நிகழ்வினை நடாத்தியிருந்தது.

இதில் நுவன் குலசேகர கலந்து கொண்டு தன்னை இன்று இந்த இடத்திற்கு கொண்டு வந்த இரசிகர்களுக்கு நன்றி கூறியதுடன், இலங்கை கிரிக்கெட் சபைக்கும் மேலான நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். மேலும், தனக்கு கிரிக்கெட் விளையாட்டில் உதவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் குலசேகர இந்த இடத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்

அத்துடன் அண்மையில் ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற லசித் மாலிங்கவுக்கும் தனிப்பட்ட ரீதியில் குலசேகர நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். 16 ஆண்டுகாலம் இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை செய்த நுவான் குலசேகரவுக்கு Thepapare.com வாயிலாக நாமும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<